'நானும் அவரும் நல்ல ஃப்ரண்ட்ஸ்...' 'ஸோ நான் அதெல்லாம் பெரிய விஷயமாவே நெனைக்கல...' - விராட் கோலி கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டன்களில் தோனியுடன் தற்போது விராட் கோலி சமநிலை வகிக்கிறார். இன்று பகலிரவு ஆட்டமாகத் தொடங்கும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றால் தோனி சாதனையை விராட் கோலி கடந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், “ஒரு அணியின் கேப்டனாக எனக்கு சாதனைகள் எல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்ப்பட்டுள்ளது அதை சிறப்புற செய்ய வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம். இப்படித்தான் நான் இப்போதும் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன். நான் விளையாடும் வரை இப்படித்தான் யோசிப்பேன். வெளியிலிருந்து பார்க்கத்தான் இந்தச் சாதனையெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியும் எனக்கு இது சாதாரணமான ஒன்று தான்.

நானும் தோனியும் பெரிய தோழமையுடன் இருந்து வருகிறோம். அதனால் சாதானையை முறியடிப்பதை நான் பெரிய விசயமாக கருதவில்லை. இந்திய அணியை உயரத்தில் கொண்டு செல்ல எனக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது. நான் ரிட்டயர்ட் ஆன பின்பு கேப்டனாக வருபவருக்கும் இது பொருந்தும். இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்பதற்காகவே ஆடுவோம், இதில் வென்று விட்டு அடுத்த போட்டியை டிரா செய்யும் எண்ணம் கிடையாது . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றால் போதும் என்பதற்காக மட்டும் ஆடுவதில்லை. 2 போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்." என்று கோலி தெரிவித்துள்ளார்.

தோனி இந்தியாவில் கேப்டனாக இருந்து 21 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார். சென்னை டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் கோலி அதனை சமன் செய்துள்ளார்.

இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றால் உள்நாட்டில் கோலியின் வெற்றி எண்ணிக்கை 22 என்று ஆகி தோனியின் சாதனையை முறியடிப்பார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்