'மனுஷன் செம காண்டுல இருந்திருக்காரு போல'... 'டிரெஸ்ஸிங் ரூமில் ஆக்ரோஷமாக கோலி கொடுத்த ரியாக்‌ஷன்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பும்ரா பவுண்டரி விளாசிய போது உடை மாற்றும் அறையிலிருந்த கோலி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது. இதனிடையே 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர், புஜாரா-ரஹானே ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இதேபோல், போட்டியின் கடைசி நாளான நேற்று  9-வது விக்கெட்டுக்கு இணைந்த முகமது ஷமி-பும்ரா ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தது.

இதற்கிடையே இந்திய வீரர்களை எளிதில் சாய்த்து விடலாம் என இங்கிலாந்து வீரர்கள் நினைத்த நிலையில், அவர்களை மிரள வைக்கும் வகையில், 93 வது ஓவரில் மார்க் வுட் வீசிய பந்தில் பும்ரா பவுண்டரி விளாசினார். இதை டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த இந்திய கேப்டன் கோலி திடீரென ஆக்ரோஷமாக மாறி கொந்தளித்தார்.

அப்போது வர்ணனையாளர்கள் 'Captain on Fire' என பஞ்ச் கொடுத்தார்கள். இதற்கிடையே ஆக்ரோஷத்தில் கோலி கெட்ட வார்த்தை பேசியதாகக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்