"விராட் கோலிக்கு தான் இப்டி எல்லாம் நடக்கணுமா?.." மைதானத்தில் கதறி அழுத ரசிகை.. மொத்த 'RCB' ஃபேன்ஸ் முகத்துலயும் சோகம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலிக்கு நிகழ்ந்த சம்பவத்தால், மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவர் கதறி அழுத சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
15 ஆவது ஐபிஎல் தொடரில், நேற்று (05.04.2022) நடைபெற்றிருந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தன.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது.
ஆரம்பத்தில் தடுமாற்றம்..
ஆரம்பத்தில், விக்கெட்டுகள் கையில் இருந்த போதும் ரன் எடுக்க தடுமாறிய ராஜஸ்தான் அணி, கடைசி இரண்டு ஓவர்களில், அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, 55 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்காமல் இருந்த நிலையில், 87 ரன்களை எடுப்பதற்குள், 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பினிஷராக மாறும் தினேஷ் கார்த்திக்
இதன் பிறகு, தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமத் ஆகியோர் இணைந்து அதிரடியாக ஆட, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது பெங்களூர் அணி. இதுவரை பெங்களூர் அணி மூன்று போட்டிகள் ஆடியுள்ள நிலையில், மூன்றிலும் ஆட்டமிழக்காத தினேஷ் கார்த்திக், சிறந்த பினிஷராக மாறி வருகிறார். அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றால், பெங்களூர் அணியின் ரசிகை ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
முன்னதாக, கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடி இருந்த சாஹல், தேவ்தத் படிக்கல் மற்றும் சைனி ஆகியோர், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கி இருந்தனர். இது பற்றி, போட்டிக்கு முன்பே பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
கண்ணீர் விட்டு கதறிய ரசிகை
தொடர்ந்து, இலக்கை நோக்கி பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், களத்தில் இருந்த கோலி மீது பெங்களூர் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அப்போது, சாஹல் வீசிய பந்தை எதிர்கொண்ட டேவிட் வில்லி, அதனை அருகே அடித்தார்.
இதனால், நான் ஸ்ட்ரைக்கில் இருந்த கோலி, ரன் ஓடி விடலாம் என எண்ணி, வேகமாக கிரீஸை விட்டு முன்னேறினார். ஆனால், வில்லி வேண்டாம் என சொல்ல, மீண்டும் கிரீசுக்குள் ஓட முயன்றார் கோலி. இவை அனைத்தையும் விட வேகமாக ஓடி வந்த கீப்பர் சாம்சன், பந்தினை டைவ் அடித்து எடுத்து, சாஹல் கையில் துல்லியமாக வீச, அவரும் அசத்தலாக கோலியை ரன் அவுட் செய்தார்.
இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக, ரசிகை ஒருவர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வும் மைதானத்தில் நடந்திருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சீசனில், தன்னுடைய கேப்டனாக செயல்பட்டு வந்த கேப்டன் கோலியை சாஹல் ரன் அவுட் செய்தது பற்றியும், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Instagram-ல் சுப்மன் கில் போட்டோவை பார்த்து கோலி சொன்ன விஷயம்.. ‘ஓ.. இத வாங்கிக் கொடுத்ததே நீங்க தானா..!’ வைரலாகும் கமெண்ட்..!
- IPL2022: ”இன்னைக்கு சில தெரிஞ்ச முகங்களோட மோத வேண்டி இருக்கு”…. RCB அணி பகிர்ந்த நாஸ்டால்ஜியா photos !
- "டு பிளெஸ்ஸிஸ் கேப்டன்சி'ல ஒரு ஸ்பெஷலும் இல்ல.." ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர்.. ஏன் அப்படி சொன்னாரு?
- IPL 2022 : தொடர்ந்து மாஸ் காட்டும் தமிழக வீரர்கள்.. அதுவும் பிறந்தநாள் ஸ்பெஷலா நடராஜன் போட்ட யார்க்கர் இருக்கே.. 'வைரல்' வீடியோ
- பிரபல நடிகையின் ஃபோட்டோவுக்கு.. வெங்கடேஷ் போட்ட கமெண்ட்.. அவங்க குடுத்து 'Reply' தான் ஹைலைட்டே..
- "MI'க்கு ரோஹித் கேப்டன் ஆகுறதுக்கு முன்னாடியே.." பல வருசத்துக்கு பிறகு தெரிய வந்த 'உண்மை'
- 'CSK' ரெய்னா கூட கொஞ்ச நேர சந்திப்பு.. இனிமே கிரிக்கெட் தான் வாழ்க்க'ன்னு முடிவு எடுத்த இளம் வீரர்.. "இன்னைக்கி 'MI'ல ஸ்டார் பிளேயர்"
- "எவ்ளோ நேர்மையா இருக்காரு!!.." நடுவரிடம் 'Dhoni' காட்டிய சைகை.. விஷயம் தெரிஞ்சதும் கொண்டாடிய ரசிகர்கள்
- தோனி மீது புகார்களை அடுக்கிய முன்னாள் வீரர்கள்.. சூசகமாக பதில் சொன்ன ஜடேஜா??..
- எல்லா மேட்ச்லயும் சொதப்பும் வீரர்?.. அடுத்த மேட்ச்ல வாய்ப்பு இருக்கா??.. ஜடேஜா முக்கிய முடிவு