"விராட் கோலி அறையை வீடியோ எடுத்தது யாரு?".. ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை.. வெளிவந்த பரபர தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியின் அறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை கிளப்பியிருந்த நிலையில், ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வி அடைந்திருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்திருந்தார். அதே போல, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார் விராட் கோலி. இந்நிலையில் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். தனது ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை சிலர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளதாகவும் இது தனியுரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விராட் கோலி தங்கியுள்ள ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஹோட்டல் ஊழியர் ஒருவர் அந்த வீடியோவை எடுத்திருப்பதாகவும் அவரை பணிநீக்கம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபெற்ற சம்பவத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதில்,"எங்களுடைய விருந்தினரின் தனியுரிமையை பாதுகாப்பதே எங்களுடைய முதன்மை கொள்கையாகும். இவ்வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கு ஹோட்டல் நிர்வாகம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கிறது. இதில் சம்பந்தப்பட்ட நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது. ஒரிஜினல் வீடியோவும் சோசியல் மீடியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய, தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIRAT KOHLI, HOTEL, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்