"25 வயசு வரைக்கும் என் டயட் இப்படித்தான்".. விராட் கோலி பகிர்ந்த சீக்ரட்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுபவர் விராட் கோலி. கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் எட்டிய உயரம் அசாத்தியமானது. ஒருநாள் போட்டிகளில் அதிக சதம், டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களை கோலி விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரையில் 5 சதங்களை எடுத்திருக்கிறார். விளையாட்டில் இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் கோலிக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

ஒருகட்டத்தில் அடுத்தடுத்து சதம் விளாசி ரசிகர்களிடையே நாயகனாக உயர்ந்த கோலிக்கும் ஒரு சரிவு ஏற்படத்தான் செய்தது. 3 ஆண்டுகள் கோலி சதம் எடுக்காமல் இருக்க இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், கோலியின் ஃபார்ம் குறித்தும் பலரும் விமர்சனம் செய்துவந்தனர்.

இப்படியான சூழ்நிலையில் தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விலாசி 'கிங் இஸ் பேக்' என உலகிற்கு நிரூபித்தார் கோலி. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி காட்டிய அதிரடி ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது.

Images are subject to © copyright to their respective owners.

எப்போதுமே உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தும் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் உங்களுடைய வினோதமான டயட் எது? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்திருந்த கோலி,"என்னுடைய 25 அல்லது 24 வயது வரையில் நான் அனைத்து விதமான துரித உணவுகளையும் சாப்பிட்டேன். அதுவே என்னுடைய மோசமான டயட்டாக இருந்தது" எனக்கூறி இருக்கிறார்.

தொடர்ந்து, கிரிக்கெட் பற்றியும் தனது குடும்பம் குறித்தும் அவர் பல்வேறு தகவல்களை அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார் கோலி. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | அடக்கடவுளே.! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் அக்கவுண்டில் இருந்து மாயமா.? .. என்ன நடந்தது? - உடைக்கும் உசைன் போல்ட்..!

VIRAT KOHLI, PAST FOOD, PAST FOOD HABITS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்