கடைசி நேரத்துலதான் ‘RCB’ என்ன எடுத்தாங்க.. கோலியை முதலில் ‘குறி’ வைத்த டீம் எது தெரியுமா..? அவரே சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் முதலில் விளையாட இருந்த அணி குறித்த ரகசியத்தை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். இதனால் அதே ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம் கிடைத்தது. அப்போது முதல் தற்போது வரை பெங்களூரு அணிக்காக மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். இதுவரை 207 போட்டிகளில் விளையாடி 6283 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மிகப்பெரிய விமர்சனம்

கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை. இதுதான் விராட் கோலி மீது வைக்க மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய விமர்சனமாக இருந்தது. அதனால் கடந்த ஐபிஎல் தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களில் உச்சபட்ச சம்பளமான 17 கோடி ரூபாயை வாங்கி வரும் வீரராக விராட் கோலி இருந்து வருகிறார். இந்த முறையும் பெங்களூரு அணி அவரை தக்க வைத்துள்ளது.

முதன்முதலில் ஏலத்தில் எடுக்க இருந்த அணி

இந்நிலையில் பெங்களூரு அணியில் இடம்பெற்றது குறித்து முதல்முறையாக விராட் கோலி பகிர்ந்துள்ளார். அதில், ‘முதலில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிதான் ஆரம்பத்தில் என்னை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் இறுதி நேரத்தில் பெங்களூரு அணியால் நான் வாங்கப்பட்டேன். இல்லையென்றால் முதல்முறையாக டெல்லி அணிக்காக ஆடும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கும்.

வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம்

அதேபோல், டெல்லி அணி தங்களது பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் வகையில் என்னுடன் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான எங்களது அணியில் பெஸ்ட் பவுலர் அவர்தான். ஆர்சிபி அணி என்னை ஏலத்தில் எடுத்ததை என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தருணமாக பார்க்கிறேன்’ என விராட் கோலி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்