VIDEO: கொஞ்சம் Zoom போங்க.. அவர் க்ளவுஸ்ல என்ன ஒட்டிருக்காருன்னு பாருங்க.. ‘வேகமாக வந்த விராட்’.. ரிஷப் பந்தால் ஏற்பட்ட பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை 78 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் செய்தது. லாட்ர்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இப்போட்டியில் 100 ரன்களுக்குள் மொத்த விக்கெட்டையும் இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன் மற்றும் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். பவுலிங்கில் மிரட்டிய இங்கிலாந்து அணி பேட்டிங்கிலும் அதே அதிரடியை காட்டியது. அதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 432 ரன்களை குவித்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில் இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த புஜாரா, ரோஹித் ஷர்மாவுடன் கூட்டணி அமைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை நீண்ட நேரமாக இங்கிலாந்து அணியால் பிரிக்க முடியில்லை.

இதில் 59 ரன்கள் எடுத்திருந்தபோது ராபின்சன் ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி ரோஹித் ஷர்மா வெளியேறினார். தற்போது புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தால் சலசலப்பு ஏற்பட்டது. முகமது சிராஜ் வீசிய 94-வது ஓவரில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்காததால், கேப்டன் விராட் கோலி மூன்றாம் அம்பயரிடம் ரிவியூ கேட்டார். அதில் பந்து பேட்டில் பட்டு சென்றது தெரியவந்தது. அதனால் அம்பயர் அவுட் கொடுத்தார்.

அப்போது ரிஷப் பந்த் கேட்ச் பிடித்ததை Zoom செய்து பார்த்த அம்பயர், அவரது க்ளவுஸில் நடுவிரலையும், ஆள்காட்டி விரலையும் டேப்பால் சுற்றி இருந்தது தெரியவந்தது. கேட்ச் பிடிக்க ஏதுவாக இருக்கும் என ரிஷப் பந்த் அப்படி செய்ததாக தெரிகிறது.

ஆனால் ஐசிசி விதிகளின்படி இப்படி செய்யக்கூடாது என்பதால், அம்பயர் டேப்பை எடுக்க வலியுறுத்தினார். இதனால் உடனே அம்பயரிடம் கேப்டன் விராட் கோலி ஆலோசனை நடத்தினார். பின்னர் ரிஷப் பந்திடம் க்ளவுஸை வாங்கி அதிலிருந்த டேப்பை எடுத்தார். இதனால் சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. இதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனிக்கும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்