பிசிசிஐ கொடுத்த ஆஃபர்.. நோ சொல்லி ஒதுங்கிய கோலி??.. என்னங்க சொல்றீங்க?.. மீண்டும் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், தற்போது அவருக்கு பிசிசிஐ அளித்த ஆஃபர் குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, கடந்த சில தினங்களுக்கு முன், அந்த பதவியில் இருந்து விலகப் போவதாக திடீரென அறிவித்தார்.
கோலியின் இந்த முடிவு, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டன் என்ற பெருமையுடன் விளங்கும் விராட் கோலி, தன்னுடைய 33 வயதிலேயே இந்த முடிவை எடுத்தது, ரசிகர்களை அதிகம் வேதனை அடையச் செய்தது.
சரித்திரம் படைத்த கோலி
அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர் என்ற பெருமை விராட் கோலியிடம் தான் உண்டு. அவரது தலைமையில், 68 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, 40 போட்டிகளில் வென்றுள்ளது. அது மட்டுமில்லாமல், கடந்த காலங்களில், வெளிநாட்டு மண்ணில் அதிக ஆதிக்கம் செலுத்தாமல் இருந்து வந்த இந்திய டெஸ்ட் அணி, விராட் கோலியின் தலைமையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அனைத்து நாடுகளிலும் தொடர் வெற்றிகளால், ஆதிக்கம் செலுத்தி வரலாறு படைத்திருந்தது.
பேட்டிங்கில் கவனம்
அப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலியின் முடிவு, நிச்சயம் மிகப்பெரிய ஏமாற்றம் தான். முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவதில், கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.
நெருக்கடி
ஆனால், ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை விலக்கிய பிசிசிஐ, புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்திருந்தது. இதனால், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சை உருவானது. பிசிசிஐயின் முடிவால், கோலியும் அதிருப்தி அடைந்தார். இன்னொரு பக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு சர்வதேச சதம் கூட கோலி அடிக்கவில்லை.
ஓய்வு முடிவு ஏன்?
அணிக்கு வேண்டி, சிறப்பான பேட்டிங்கை கோலி தொடர்ந்து வழங்கினாலும், முன்பு போல அவரின் பேட்டிங் தாக்கம் இருப்பதில்லை. இப்படி, கேப்டன் பதவி மற்றும் பேட்டிங் என இரண்டு பக்கமும் நெருக்கடி இருந்த காரணத்தினால் தான், கோலி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இனிவரும் போட்டிகளில், தனது பேட்டிங்கில் முழு நேர கவனத்தையும் செலுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு
இதனிடையே, தற்போது கோலி குறித்த மற்றொரு தகவலும் வெளியாகி, அவரது ரசிகர்களை மேலும் வேதனை அடையச் செய்துள்ளது.
இதுவரை, 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி, அவரது 100 ஆவது டெஸ்ட் போட்டியை, இலங்கை அணிக்காக, பெங்களுர் மைதானத்தில் வைத்து பிப்ரவரி மாதம் ஆடவுள்ளார். இதனால், அவரின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில், கேப்டனாக இருந்து, பின்னர் பதவி விலகும் முடிவை எடுத்துக் கொள்ள, பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறுத்த கோலி
ஆனால், அந்த வாய்ப்பை மறுத்த கோலி, கேப்டனாக, ஒரே ஒரு போட்டியில் அதிகம் ஆடுவதில், பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றது. ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, அந்த அணியின் கேப்டன் பதவியிலும் இருந்தும், 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருடன் ஒதுங்கிக் கொண்டார்.
ரசிகர்கள் ஏமாற்றம்
இனி அவரை பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில், ஒரு கேப்டனாக பார்க்க முடியாது என்ற நிலை உள்ளது. இதனிடையே, தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பெங்களூர் மைதானத்தில், கடைசியாக ஒரு முறை ஆடும் வாய்ப்பு, கோலிக்கு கிடைத்த நிலையில், அதனை கோலி மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால், அவரின் ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோலி பயந்துட்டாரு...அதுனால தான் கேப்டன் பதவியை ராஜினாமா செஞ்சுருக்காரு! - ஆதாரங்களுடன் பேசிய சஞ்சய் மஞ்சரேகர்
- கோலிக்கு முடிவெடுக்குற திறமை சுத்தமா கிடையாது..! அதுக்கு அந்த ஆஸ்திரேலியா மேட்ச் தான் உதாரணம்.. சுனில் கவாஸ்கர்
- இதுக்கும் மேல கோலிக்கு பிரஷர் குடுத்துறாதீங்க.. டக்குனு ‘அந்த’ முடிவை எடுத்திருவாரு.. கொதிக்கும் ரசிகர்கள்..!
- நான் விலகுறேன்.. விராத்தின் அறிவிப்பால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி..ஏன் இப்படி பண்ணிங்க கோலி? சோகத்தில் ரசிகர்கள்...
- இப்டி பண்ணதுக்கு.. கோலி'ய சஸ்பெண்ட் பண்ணுங்க.. வலுக்கும் எதிர்ப்பு.. இனி என்ன தான் நடக்கும்??
- "கோலி ஒரு ரோல் மாடலா என்னைக்கும் இருக்க முடியாது.. கேப்டன் இப்டி பண்றது.." விளாசிய கம்பீர்
- ஒரு அம்பையரையே மிரண்டு போயி ஸ்டம்ப் மைக்ல பொலம்ப உட்டுருக்கானுங்க.. இந்த சவுத் ஆப்ரிக்கா காரனுக..
- டெஸ்ட் கிரிக்கெட்'ல இப்டி நடந்ததே இல்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. இந்திய அணியில் நடந்த சம்பவம்
- 'ஐபிஎல்' என் சந்தோஷத்த இல்லாம பண்ணிடுச்சு.. டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா?.. கலங்கிய ரசிகர்கள்
- இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா.. உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்.. இந்திய அணிக்கு வந்த சோதனை