‘என்ன இங்க இருந்த போட்டோவ காணோம்’.. கேப்டன் உங்ககிட்டயே சொல்லலையா?.. என்ன ஆச்சு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து புரோபைல் மற்றும் கவர் போட்டோ நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முக்கிய அணியாக கருதப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில்லை. இதனால் தொடர்ந்து ரசிகர்களிடையே இந்த அணி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ‘பெங்களூரு’ நீக்கப்பட்டு ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் புரோபைல் போட்டோ மற்றும் கவர் போட்டோவும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டன. எந்தவித அறிவிப்புமின்றி திடீரென நடந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, ‘கேப்டனிடம் தெரிவிக்காமல் பதிவுகள் மறைந்துவிட்டன. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார். அதேபோல் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், ‘அரே ஆர்சிபி, என்ன கூக்லி (Googly) இது? எங்க போனது உங்கள் புரோபைல் போட்டோ மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள்?’ என கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சின்னப்பசங்க' கிண்டலடித்த நியூசி.வீரர்... ஐபிஎல்ல வா 'ராசா' ஒன்ன வச்சு செய்றேன்... கெத்து 'ரிப்ளை' கொடுத்த கேப்டன்!
- 'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'இந்த' மாதிரி பண்றவங்கள 'வச்சுக்கிட்டு'... நான் 'என்ன' செய்றது?... கடுப்பான கோலி!
- உங்களுக்கு 'சூப்பர் ஓவர்' நடத்தியே... நாங்க 'ஓய்ஞ்சு' போயிட்டோம், அதனால 'நல்லா' கேட்டுக்கங்க... புதிய 'விதிகளை' வெளியிட்ட ஐசிசி!
- பேசாம 'அவர்கிட்ட' குடுத்துருங்க... இதுக்கு மேலயும் நீங்க 'கேப்டனா' தொடரணுமா?... வறுக்கும் ரசிகர்கள்... காரணம் இதுதான்!
- உண்மையிலேயே 'காயம்' சரியாகிடுச்சா?... அவர 'பார்த்தா அப்டி... சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்!
- இந்த 'ரணகளத்துக்கு' மத்தியிலயும் ஒரு கிளுகிளுப்பு... சக வீரருடன் இணைந்து செம 'ரொமாண்டிக்' போஸ்...வைரலோ வைரல்!
- அவரு 'அப்டி' பண்ணதுக்கு...என்ன காரணம்னு 'நாங்க' கண்டு புடுச்சிட்டோம்... மரண கடுப்பிலும் 'கடமை' தவறாத ரசிகர்கள்!
- ‘இப்டி மோசமா தோற்றுப் போனதுக்கு’... ‘அந்த இளம் வீரர் தான் காரணம்’... ‘அவர ஏன் இன்னமும் டீம்ல வச்சிருங்கீங்க’... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!