Virat Kohli : கேட்சை பிடிச்சுட்டு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்த கோலி.. வைரலாகும் Pic..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணி உடனான போட்டியின்போது, சாம் பில்லிங்ஸ் கேட்சை பிடித்த பிறகு விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் பற்றித்தான் தற்போது கிரிக்கெட் உலகம் பரபரப்புடன் பேசிவருகிறது.

Advertising
>
Advertising

IPL 2022: இப்ப இவருதான் overall பர்ப்பிள் CAP வின்னர்… CSK வீரர் படைத்த செம்ம சாதனை!

ஐபிஎல் 2022

உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் துவங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் கொல்கத்தா தனது இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கடந்த புதன்கிழமை அன்று எதிர்கொண்டது. மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா 128 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தது பெங்களூரு அணி. ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை தவறவிட்ட பெங்களூரு அணி கடைசியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

விராட் கோலி ரியாக்ஷன்

இந்த போட்டியில், கொல்கத்தா வீரர் சாம் பில்லிங்ஸ் ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த போது, பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேலிடம் பந்தை கொடுத்தார் அந்த அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ். படேல் வீசிய, 12 வது ஓவரின் 4 வது பந்தில் சாம் பில்லிங்ஸ் அடித்த ஷாட் சரியாக க்ளிக் ஆகாமல் மேலே எழும்பியது. விராட் கோலி அந்த கேட்சை லாவகமாக பிடித்தார். அதன் பிறகு, ரசிகர்களை நோக்கி வித்தியாசமான முறையில் வாயை அசைத்து கோலி கொடுத்த ரியாக்ஷன் அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

கிரிக்கெட் களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை எடுத்த பிறகு கொடுத்த ரியாக்ஷன் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

"கருப்பு நிற தாளை கழுவினால் நல்ல ரூபாய் நோட்டு".. வித்தியாசமாக உருட்டிய கும்பல்.. போலீஸ் போட்ட ஸ்கெட்ச்..!

CRICKET, IPL, VIRAT KOHLI, SAM BILLINGS, IPL 2022, KOLKATA KNIGHT RIDERS, ROYAL CHALLENGERS BANGALORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்