"பும்ரா என்னங்க பண்ண போறாரு?.." புறக்கணித்த 'கோலி'.. இப்டி ஒரு சான்ஸ யாராச்சும் மிஸ் பண்ணுவாங்களா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

Advertising
>
Advertising

முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், இரண்டாவது போட்டியில் டெல்லி அணியும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணியும் தங்களின் வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களை போலவே, தற்போதைய தொடரும் ஆரம்பத்திலேயே விறுவிறுப்புடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

பும்ரா குறித்த தகவல்

இன்று நடைபெறவுள்ள நான்காவது போட்டியில், புதிய இரு அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளதால், தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, பும்ரா குறித்த அசத்தல் தகவல் ஒன்றை, இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

நம்பர் 1 பவுலர்'ங்க அவரு..

2013 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய பும்ரா, தன்னுடைய சிறந்த பந்து வீச்சுத் திறனால், இந்திய அணியிலும் இடம்பிடித்து, இன்று இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராகவும் உயர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் பும்ரா திகழ்ந்து வருகிறார்.

பும்ராவை புறக்கணித்த கோலி

அப்படிப்பட்ட  பும்ராவை அணியில் எடுக்காமல் கோலி ஒருமுறை புறக்கணித்ததை பற்றி தான் பார்த்தீவ் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். "2014 ஆம் ஆண்டு, நான் ஆர்சிபி'யில் இருந்த போது, பும்ரா என ஒரு பந்து வீச்சாளர் இருப்பதாகவும், அவரை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்றும் கோலியிடம் கூறினேன். அதற்கு கோலியோ, 'விட்டு விடுங்கள். அத்தகைய வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்?' என என்னிடம் கூறினார்" என குறிப்பிட்டுள்ளார்.

கடின உழைப்பால் உயர்ந்த பும்ரா

பார்த்தீவ் சொன்னது போல, பெங்களூர் அணி பும்ராவை எடுத்திருந்தால், நிச்சயம் அந்த அணியில் தற்போது வரை பும்ரா நீடித்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கலாம். தொடர்ந்து, பும்ராவின் கடின உழைப்பு பற்றி பேசிய பார்த்தீவ் படேல், "ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டு, மும்பை அணிக்காக பும்ரா அறிமுகம் ஆனார். அதே ஆண்டிலும், 2014 ஆண்டு ஐபிஎல் தொடரிலும், பும்ராவின் பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. 2015 ஆம் ஆண்டில் இன்னும் மோசமானது. அவரை வெளியே அனுப்புவது பற்றி கூட, மும்பை அணியினர் யோசித்தனர்.

ஆனால், அவரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது மும்பை அணி. இதன் பிறகு, தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக, நன்கு மெனக்கெட்ட பும்ரா, இன்று மிகச் சிறந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்" என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, 10 ஆண்டுகள் ஆடியுள்ள பும்ராவிற்கு, மும்பை அணியினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

VIRATKOHLI, JASPRIT BUMRAH, PARTHIV PATEL, IPL 2022, MI, RCB, பார்த்தீவ் படேல், விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்