கோலி'ய பாத்து வேகமா ஓடி வந்த ரசிகர்.. மறுகணமே நடந்த பரபரப்பு.. "அப்போ விராட் குடுத்த ரியாக்ஷன பாக்கணுமே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக, லீக் சுற்றுகள் முடிவில் முறையே குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்திருந்தது.
இதனையடுத்து, முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள், முதல் குவாலிஃபயர் போட்டியில் மோதி இருந்தது.
சதமடித்த ராஜத் படிதர்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் சீனியர் வீரர்கள் ஏமாற்றிய போதும், இளம் வீரர் ராஜத் படிதர், தனியாளாக நின்று சதமடித்து அசத்தியிருந்தார்.
இதனால், 207 ரன்களை பெங்களூர் சேர்க்க, 208 ரன்கள் என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது. அப்போது, கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகள் விழ, லக்னோ அணி ரன் எடுக்க முடியாமல் திணற, பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இதனைத் தொடர்ந்து, நாளை (27.05.2022) நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ரசிகர் செய்த செயல்
இதனிடையே, பெங்களூர் மற்றும் லக்னோ மோதிய போட்டியின் போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பெங்களூர் அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணி வீரர் கோலி பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரைக் காண்பதற்காக, ரசிகர் ஒருவர் கம்பியைத் தாண்டி, நேராக மைதானத்தில் குதித்து விட்டார்.
அவர் நேரடியாக விராட் கோலியை பார்த்து ஓடி வர, உடனடியாக அந்த இளைஞரை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது தான், அங்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் அரங்கேறியது. அந்த போலீசாரில் ஒருவர், அந்த இளைஞரை தோளில் சுமந்தபடி, வேகமாக மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றார்.
கோலி கொடுத்த ரியாக்ஷன்
இதனை ஆச்சரியமாக அருகே நின்று வியந்து பார்த்த கோலி, அப்படியே ஒரு நிமிடம் மைதானத்தில் உட்கார்ந்து விட்டார். தொடர்ந்து, அந்த போலீசார் எப்படி இளைஞரை தூக்கிக் கொண்டு சென்றாரோ, அதே போல செய்து காட்டி சிரித்துக் கொண்டே இருந்தார் கோலி.
போலீசார் செயலைக் கண்டு, விராட் கோலி மைதானத்திலேயே கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏன் ஒரு மேட்ச்ல கூட அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை?.. முதல்முறையாக மௌனம் கலைத்த சச்சின்..!
- அசால்ட்டா கடசி ஓவரில் பினிஷ் செய்த மில்லர் … மேட்ச் முடிஞ்சதும் போட்ட வைரல் Tweet
- IPL 2022 : "அவருக்காக இந்த டீம் தான் கப் ஜெயிக்கணும்.." முன்னாள் 'CSK' வீரர் ரெய்னாவின் விருப்பம் என்ன??..
- IPL 2022 : வலியால் துடித்து.. நிலைகுலைந்த மயங்க் அகர்வால்.. மைதானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.. வைரலாகும் 'வீடியோ'
- 3 வருஷத்துக்கு அப்புறம் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்… அறிவிப்பு வந்ததும் போட்ட வைரல் Tweet
- "ஜெயிச்சு Playoff கூட போயிருக்கலாம்.." லட்டு மாதிரி வந்த வாய்ப்பு.. தவற விட்ட டெல்லி.. கடைசியில் ரிஷப் பண்ட் சொன்ன பரபரப்பு காரணம்
- மும்பை அணிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் போட்ட ட்வீட்.. "அதுவும் அவர் போட்ட ஃபோட்டோ இருக்கே.. அது தான் 'செம' வைரல்"
- MI அணியின் கையில் RCB-ன் ப்ளே ஆஃப் வாய்ப்பு.. ரிசல்ட் இன்னைக்கு தெரிஞ்சிடும்.. எப்படி தெரியுமா..?
- "எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." சிஎஸ்கே'வுக்கு எதிரான 'மேட்ச்'.. மாஸ் காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. பின்னணி என்ன?
- "என்கிட்ட என்ன கேக்க போறீங்க?.." ஜாஸ் பட்லர் பேச வந்ததும்.. கோலி சொன்ன விஷயம்.. செம வைரல்