தீப்பறக்கும் முதல் டெஸ்ட் போட்டி.. இவ்ளோ பரபரப்புக்கும் நடுவுல கோலி - ஸ்மித்தோட குட்டி ஃப்ரெண்ட்ஷிப்ப கவனிச்சீங்களா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களை கைப்பற்றி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி உள்ளது. முதல் போட்டியின் இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தொடர்ந்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners

கேப்டன் ரோஹித் ஷர்மா 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அக்சர் படேல் 52 ரன்களுடனும், ஜடேஜா 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 144 ரன்களுடன் முன்னிலை வகிக்கும் சூழலில் இன்னும் மூன்று நாட்கள் மீதம் உள்ளது. இதனால் மூன்றாவது நாளில் சிறப்பாக ஆடி இந்திய அணி ரன் குவிக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய வீரர் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இடையே நடந்த குட்டி உரையாடல் குறித்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 14 ஆவது ஓவரை அக்சர் படேல் வீசி இருந்தார். இந்த ஓவரின் இறுதி பந்தை ஸ்மித் எதிர்கொள்ள அந்த ஓவர் முடிந்ததும் இந்திய வீரர்கள் மாறிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே நின்ற ஸ்மித் அருகே சென்ற கோலி, அவர் தோளில் கைபோட்டதுடன் சில வார்த்தைகளை சிரித்தபடி உரையாடவும் செய்திருந்தார். இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தாலும் இது போன்ற நட்பு நிறைந்த தருணங்கள் மனதை நெகிழ வைக்கக் கூடியவை ஆகும்.

Images are subject to © copyright to their respective owners

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

VIRATKOHLI, STEVE SMITH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்