"நான் இத சொன்னா, கண்டிப்பா 'டிவில்லியர்ஸ்'க்கு பிடிக்காது.. இருந்தாலும் நான் சொல்றேன்.." போட்டிக்கு பிறகு 'கோலி' பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ஆகிய அணிகள், நேற்று மோதிய நிலையில், பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், டிவில்லியர்ஸ் (Devilliers) மட்டும் தனியாளாக நின்று, டெல்லி அணியினரின் பந்து வீச்சை சிதறடித்தார். இறுதி வரை களத்தில் நின்ற டிவில்லியர்ஸ், 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால், இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பாக ஆடிய போதும், ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் காரணமாக, பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, வெற்றிக்கு பின் பேசிய பெங்களூர் கேப்டன் கோலி (Kohli), 'ஒரு கட்டத்தில் போட்டி கையை விட்டுச் சென்று விட்டது என்றே எண்ணினேன். ஆனால், சிராஜ் கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி, வெற்றியை பெற்றுத் தந்தார்.
நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். ஆனால், டிவில்லியர்ஸ் அற்புதமாக பேட்டிங் செய்ததால், நாங்கள் நல்ல ஸ்கோரை எட்டினோம். அதன் பிறகு, டெல்லி வீரர் ஹெட்மயர் களத்தில் நின்றதால், கொஞ்சம் பதற்றம் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் போது, பனிப் பொழிவு இல்லாத காரணத்தால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றோம்' என்றார்.
தொடர்ந்து, டிவில்லியர்ஸ் பேட்டிங் பற்றி பேசிய கோலி, 'நான் இப்போது ஒரு விஷயத்தைச் சொன்னால், நிச்சயம் டிவில்லியர்ஸிற்கு பிடிக்காது. இருந்தாலும் சொல்கிறேன்.
அவர் கடைசி 5 மாதங்களில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடவேயில்லை. ஆனால், அவர் பேட்டிங் செய்ததை பார்த்தால், சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை என்ற உணர்வையே தரவில்லை. இன்னும் நிறைய போட்டிகளில், ஆர்சிபி அணிக்காக, இது போன்று அவர் ஆடித் தர வேண்டும்.
எங்கள் அணிக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து அவர். நான் இதனை மீண்டும் சொல்கிறேன் (சிரித்துக் கொண்டே). அவர் ஐந்து மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இருந்த போதும் அவரது ஆட்டத்தை பாருங்கள்' என கோலி, டிவில்லியர்ஸை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரே ஒரு ரன்ல மிஸ் ஆகிடுச்சே’!.. ‘கடைசி பந்துல நீங்க அதை பண்ணிருக்கலாமே?’.. ரிஷப் பந்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- நீங்க சாதாரண விக்கெட்லாம் எடுக்க மாட்டீங்களா?.. எடுத்தா பெரிய ஆளுக விக்கெட்டு தானா?.. கோலியை காலி செய்த இளம் வீரரின்... மாஸ் பின்னணி!!
- ஆக்ரோஷத்தில் துள்ளிக் குதித்த 'கோலி'.. ஆனா அதுக்கப்புறம் காத்திருந்த 'ட்விஸ்ட்'.. மொத்தமா 'ஷாக்'காகி 'கோலி' கொடுத்த 'ரியாக்ஷன்'.. 'வைரல்' வீடியோ!!
- ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல... பவுலர்ஸ திணறடிக்கும்... இவங்க ரெண்டு பேரையும் ஆர்சிபியில் கோச் பண்றது யாரு?.. லீக்கான டாப் சீக்ரெட்!
- 'வீராப்பாக கிளம்பி வந்துட்டு... இப்படி வசமா மாட்டிகிட்டோமே'!.. பரிதாபமான நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள்!.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?
- "'இத' தான் என்னால தாங்கிக்கவே முடியல.. நான் ஊருக்கே போயிடுறேன்.." 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகிய 'ஆடம் ஸம்பா'.. கடுப்பில் சொன்ன 'காரணம்'!!
- "அவரு அந்த அளவுக்கு நல்லா ஆடுற மாதிரி ஒண்ணும் தெரியல.. 'முதல்'ல அவர வெளிய வைங்க.. அப்புறமா டீம் செட் ஆயிடும்.." 'RCB' பற்றி முன்னாள் வீரர் சொன்ன 'விஷயம்'!!
- VIDEO: ‘கொல்கத்தா வீரர் சொன்ன ஒரு வார்த்தை’!.. உணர்ச்சிவசப்பட்டு ‘கண்கலங்கிய’ ஸ்டெய்ன்.. Live-ல் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'இதுவரைக்கும் நல்லா போய்கிட்டு இருந்துச்சு...' 'தொடர்ச்சியா அடிக்கு மேல அடியா விழுது...' - ஆர்சிபி டீம்-க்கு மேலும் ஒரு சோகம்...!
- 'நாங்க 2 பேரும் சேர்ந்து பேட்டிங் பண்றப்போ...' மேக்ஸ்வெல் 'அந்த விசயத்த' அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' - மனம் திறந்த டிவில்லியர்ஸ்...!