‘தொடர்ந்து 3-வது முறை’... ‘ஒப்புக்கொண்ட விராட் கோலி’... 'ஐசிசி எடுத்த அதிரடி முடிவு'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 50 ஓவர்களை வீசாமல், 46 ஓவர்கள் மட்டுமே இந்திய பவுலர்கள் வீசினர்.  4 ஓவர்கள் மெதுவாக வீசியதையடுத்து, இந்திய அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 80 சதவீதம் அபராதமாக ஐசிசி விதித்தது.

ஐசிசி ஒழுங்கு நடத்தை விதி 2.22 பிரிவை மீறியதால், இந்திய அணியின் வீரர்கள், வீரர்களின் உதவி ஊழியர்கள் ஆகியோருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், ‘நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பந்து வீசாமல் அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஏற்றுக்கொண்டார். தங்கள் அணியின் தவறை உணர்ந்து அபராதம் விதிப்பதைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஆதலால், முறைப்படியான விசாரணை ஏதும் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே  4-வது டி20 போட்டியின் போது பந்து வீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்கு 40 சதவீதம் அபராதமும், 5-வது டி20 போட்டியில் 20 சதவீதம் அபராதமும் ஐசிசி விதித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணிக்குத் தொடர்ந்து 3-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

VIRATKOHLI, ICC, BCCI, NZVSIND, FINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்