‘இந்த பூச்சாண்டியெல்லாம் வேற யார்கிட்டயாவது காட்டுங்க’.. சவால் விட்ட நியூஸிலாந்து வீரர்.. வேறலெவல் ‘பதிலடி’ கொடுத்த கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறிய கருத்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. தொடரின் முதல் போட்டியே இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இன்று (31.10.2021) நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியில் விளையாடுவது குறித்து பேட்டியளித்த நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் (Trent Boult), ‘பாகிஸ்தான் வீரர் சாஹின் அப்ரிடி (Shaheen Afridi), இந்திய அணியின் டாப் ஆர்டரை காலி செய்தார். இதையேதான் நானும் செய்ய இருக்கிறேன். பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுத்தால், நிச்சயம் இந்தியாவை வீழ்த்த முடியும்’ என கூறியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அஃப்ரிடி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் வீசிய 3-வது ஓவரில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தார். இதனால் நிலைகுலைந்துபோன இந்திய அணி, வேகமாக ரன்களை எடுக்க முடியாமல் திணறியது. இதே உக்தியைதான் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட்டும் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), ‘கடினமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய உள்ளோம் என்பது உண்மைதான். டிரெண்ட் போல்ட், பாகிஸ்தான் வீரர் சாஹின் அஃப்ரிடி போல் விளையாட உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பந்தை எப்படி துவம்சம் செய்வது என்று நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். எங்களுக்கு எந்த பயமும் இல்லை. இந்த மாதிரியான பவுலிங்கிற்கு எதிராக பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறோம்’ என விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் (57 ரன்கள்) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, INDVNZ, T20WORLDCUP, TRENTBOULT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்