தனது கிரிக்கெட் பேட்டை மாற்றுகிறாரா விராட் கோலி? புது BAT-ல அப்படி என்ன ஸ்பெஷல்! முழு விவரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தனது கிரிக்கெட் பேட்டை மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது கிரிக்கெட் பேட்டை மாற்றுகிறாரா விராட் கோலி? புது BAT-ல அப்படி என்ன ஸ்பெஷல்! முழு விவரம்
Advertising
>
Advertising

Also Read | மூதாட்டியின் இறுதிச் சடங்கில்.. சிரிச்சுகிட்டே போஸ் கொடுத்த 'குடும்பம்'.. உருவான 'சர்ச்சை'.. தற்போது தெரிய வந்த பின்னணி

விராட் கோலி தனது ஆரம்ப கால போட்டிகளில் நைகி பிராண்ட் பேட்டை பயன்படுத்தினர். பின்னர் MRF பிராண்ட் பேட்டை தற்போது வரை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி சிறப்பு கோல்ட் விஜார்ட் குவாலிட்டி பேட் கொண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேட் வெண்ணிற இங்கிலிஷ் வில்லோவால் செய்யப்பட்டது.

Virat Kohli New Bat Special Gold Wizard Quality for Asia Cup Series

ஆகஸ்ட் 27 (சனிக்கிழமை) முதல் செப்டம்பர் 11 வரை  நடைபெறவிருக்கும்  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு டயர் உற்பத்தி நிறுவனமான எம்.ஆர்.எஃப் பிராண்ட் கோல்ட் விஜார்ட் குவாலிட்டி பேட்டை பயன்படுத்த உள்ளார்.

இந்த பேட்டின் விலை குறைந்தது 22,000 ரூபாய் என தெரிகிறது.

கோலி, தற்போது மிக மோசமான பார்மில் உள்ளார். இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படும், முன்னாள் இந்திய கேப்டன் கோலி இந்த ஆண்டு சர்வதேச சர்க்யூட்டில் மோசமான பார்மில் இருக்கிறார்,  அவருடைய சராசரி 31.80 என 2008 க்கு பிறகு சரிந்துள்ளது.

கோலி சதமடித்து 1000 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்தியாவுக்கான அவரது அடுத்த போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை  பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரில் ஆட உள்ளார். இந்த புது பேட் மூலம் கோலி சதமடித்து அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read | RIP Yora Tade: "23 வயசுதான்" .. பிரபல அருணாசல குத்துச்சண்டை வீரர் சென்னையில் மரணம்.! பெரும் சோகம்.

CRICKET, VIRAT KOHLI, VIRAT KOHLI NEW BAT, GOLD WIZARD QUALITY, ASIA CUP SERIES, MRF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்