செக் வைத்த வங்காளதேச கேப்டன்.. பதிலுக்கு விராட் கோலி செஞ்ச அதிரடி சம்பவம்!!.. "கிங்கு கிங் தான்யா"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் நடந்து முடிந்திருந்த நிலையில், தற்போது வங்காளதேசத்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் போட்டி, நேற்று (04.12.2022) நடைபெற்றிருந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் உள்ளிட்டோர் மீண்டும் வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கி இருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது, அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி உள்ளிட்டோர் பெரிய அளவில் ரன் குவிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கே எல் ராகுல் மட்டும் 73 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வங்காளதேச அணி தடுமாற்றம் கண்டதால் இந்திய அணி தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் கருதினர். ஆனால், கடைசி விக்கெட்டுக்கு கைகோர்த்த மெஹிதி ஹாசன் மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் சிறப்பாக ஆடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் அணியை வெற்றி பெற செய்து இந்திய அணிக்கு அதிர்ச்சியும் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், விராட் கோலி எடுத்த கேட்ச் தொடர்பான சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஷகிப் அல் ஹசன் ஓவரில், 9 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி ஆட்டமிழந்திருந்தார். அதுவும் வங்காளதேச கேப்டன் லிட்டன் தாஸ் தாவி காற்றில் எடுத்த அற்புதமான கேட்ச் காரணமாக விராட் கோலி நடையை கட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து, வங்காளதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தன்னை அவுட் எடுத்த ஷகிப் அல் ஹசன் அடித்த பந்தை தாவி அற்புதமாக ஒற்றைக் கையில் பிடித்தார் விராட் கோலி.

லிட்டன் தாஸ் எப்படி ஒரு கேட்சை எடுத்து தன்னை அவுட் செய்தாரோ அதே போல அற்புதமாக விராட் கோலி எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

VIRATKOHLI, IND VS BAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்