அடேங்கப்பா..! கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா.. வியக்க வைக்கும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு வரும் வருமானம் குறித்த தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல சாதனை படைத்து வரும் விராட் கோலி, உலக கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். அதனால் பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் ஏ ப்ளஸ் பிரிவில் சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பரங்கள், நிறுவன பங்கு என பல வகையில் கோடிகளை விராட் கோலி குவித்து வருகிறார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில், ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் ஆண்டுதோறும் அந்த அணியிடமிருந்து கோடிக்கணக்கில் விராட் கோலி சம்பளமாக பெற்று வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளில் சம்பளம் பெற்று வரும் தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hopper HQ என்ற தனியார் பத்திரிக்கை, இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ இருக்கிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு சுமார் 12 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இரண்டாவது இடத்தில் WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் இருக்கிறார். ராக் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கும் 11 கோடி ரூபாயை அவர் சம்பளமாக பெறுகிறார்.

இப்படி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளை குவிக்கும் பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 395 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர்களில் விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். முதல் 20 இடத்திற்குள் இடம்பிடித்திருக்கும் கோலி, தான் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை வருமானமாக பெறுகிறார். அதேபோல் இந்த பட்டியலில், தென் ஆப்பிரிக்கா வீரர்களான டூ பிளிசிஸ், ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்