ஆக்ரோஷத்தில் துள்ளிக் குதித்த 'கோலி'.. ஆனா அதுக்கப்புறம் காத்திருந்த 'ட்விஸ்ட்'.. மொத்தமா 'ஷாக்'காகி 'கோலி' கொடுத்த 'ரியாக்ஷன்'.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) ஆகிய அணிகள் இன்று மோதின.

இரு அணிகளுமே தலா 4 வெற்றிகளுடன் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய பெங்களூர் அணியில், டிவில்லியர்ஸ் (டிவில்லியர்ஸ்) மிகவும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார்.

இருபது ஓவர்கள் முடிவில், பெங்களூர் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஆனால், இறுதியில் கைகோர்த்த பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோர், மிகவும் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர்.

தொடர்ந்து, இறுதி கட்டத்தில் சற்று பரபரப்பு நிலவியது. கடைசி ஓவரில், டெல்லி அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டெல்லி அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக, பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடமும் பிடித்தது.

இதனிடையே, இந்த போட்டியின் மத்தியில், கோலி அதிர்ச்சியுடன் கொடுத்த ரியாக்ஷன் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 7 ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அப்போது, பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட்டின் பேடில் பட்டது. இதன் காரணமாக, சுந்தர், கோலி உள்ளிட்ட பெங்களூர் அணி வீரர்கள், அவுட்டிற்கு அப்பீல் செய்தனர்.

 

மிகவும் ஆக்ரோஷமாக பெங்களூர் அணி வீரர்கள் அப்பீல் செய்த நிலையில், நடுவரும் அவுட் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பேட்டில் பந்து பட்டிருந்ததை உணர்ந்த பண்ட், 'டிஆர்எஸ்' ரிவ்யூ கொடுக்க, ரிப்ளேயில் அவுட்டில்லை என்பது உறுதியானது. அவுட் என நினைத்து, ஆக்ரோஷத்தில் கத்திய கோலி, அவுட்டில் என்பது தெரிந்ததும், அதிர்ச்சி ரியாக்ஷன் ஒன்றைக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அது மட்டுமில்லாமல், கோலி மற்றும் பெங்களூர் அணியின் செயலைக் கண்டு, நியூசிலாந்து வீரர் மிட்செல் மெக்லனகன் (Mitchell McClenaghan), கொதித்து போயுள்ளார். கோலி மற்றும் பெங்களூர் அணி வீரர்கள், அப்பீல் என்ற பெயரில், நடுவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறி, பெங்களூர் வீரர்களின் செயல்பாடை விமர்சனம் செய்த மெக்லனகன், தன்னுடைய ட்வீட்டில், 'இது அவமதிப்பான செயல். அப்பீல் செய்யலாம். ஆனால், 5 முறைக்கு மேல் அப்பீல் செய்ய முடியும் என நினைக்க வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார்.

கோலி அண்ட் கோ செயல்பாடு குறித்து, நியூசிலாந்து அணி வீரர் செய்துள்ள ட்வீட்டும், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்