VIDEO: இப்டி ‘மாஸ்’ காட்டுவார்னு யாருமே எதிர்பாக்கல.. கோலி முகத்துல அப்டி ஒரு ‘சந்தோஷம்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அரைசதம் அடித்து அசத்தினார்.

VIDEO: இப்டி ‘மாஸ்’ காட்டுவார்னு யாருமே எதிர்பாக்கல.. கோலி முகத்துல அப்டி ஒரு ‘சந்தோஷம்’.. வைரலாகும் வீடியோ..!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 17ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.

Virat Kohli leads guard of honour for Bumrah after maiden fifty

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரீத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக சுப்மன் கில் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ப்ரீத்வி ஷா 40 ரன்களும், சுப்மன் கில் 43 ரன்களும் எடுத்தனர்.

ஆனால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் 129 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. இந்த சமயத்தில் களமிறங்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அதிரடியாக விளையாடி அரைசதம் (57 பந்துகளில் 55 ரன்கள்) அடித்தார். அதேபோல் கடைசியாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜும் 22 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் 10 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 194 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் அலெக்ஸ் ஹேரி 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை முகமது ஷமி மற்றும் நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதில் கடைசி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அடித்த அரைசதமே இந்திய அணி சற்று கௌவுரமான ரன்களை எடுக்க உதவியது என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் கேப்டன் கோலி உட்பட இந்திய வீரர்கள் பும்ராவுக்கு Guard of Honour செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்