T20 World Cup : Semi Finalsல.. இந்தியாவுக்காக கடைசியா விக்கெட் எடுத்தது கோலி தானா??.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலக கோப்பையின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இது பற்றி கருத்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவில் டி 20 தொடர் ஆரம்பமான சமயத்தில் கோப்பையை கைப்பற்ற கூடிய அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் திகழ்ந்திருந்தது.

பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் மொத்தம் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தங்கள் பிரிவின் புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி, அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாகவே பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருந்தது.

பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததால் இந்திய அணியும் தகுதி பெற்று 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை இறுதி போன்று இரு அணிகளும் மோத வேண்டும் என்றும் எதிர்பார்த்து வந்தனர்.
 

ஆனால், இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழக்காமல் அதிரடியாக ஆடியது. இதனால், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணியின் இறுதி போட்டி கனவு எட்டாமல் போனதால் இந்திய அணி வீரர்களான கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண் கலங்கினர். ரசிகர்களும் பெரிய அளவில் மனம் நொந்து போயினர்.

இதனிடையே, இந்திய அணிக்காக டி 20 உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில் கடைசியாக விக்கெட் எடுத்தது விராட் கோலி தான் என்ற விஷயத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் 6 போட்டிகள் ஆடி இருந்த விராட் கோலி, 296 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக தன் மீதிருந்த விமர்சனங்களுக்கும் விடை சொல்லி இருந்தார் கோலி. இதற்கு முன்பு உலக கோப்பை தொடர்களில் தனது சிறந்த ஃபார்மை நிரூபித்து வந்த நிலையில், கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பது தொடர்நது எட்டாக் கனியாகவே உள்ளது.

இதற்கு மத்தியில், நடப்பு தொடரின் அரை இறுதி போட்டியில் ஒரு விக்கெட் கூட இந்திய அணி எடுக்கவில்லை. இதனால், டி 20 உலக கோப்பையின் அரை இறுதி போட்டியில் கடைசியாக விக்கெட் எடுத்த இந்திய வீரர் விராட் கோலி என்பது பற்றி ரசிகர்கள் தற்போது குறிப்பிட்டு வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆடி இருந்தது.

இதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான்சன் சார்லஸ் விக்கெட்டை ரோஹித் எடுத்திருந்தார். இதன் பின்னர், 2021 ஆம் ஆண்டு இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறவில்லை. தொடர்ந்து, நடப்பு தொடரில் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, IND VS ENG, T 20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்