'மைதானத்தில் அந்த நேரத்தில்’.... ‘கேப்டன் கோலியின் செயலை கண்டு’... ‘ஆச்சரியமடைந்ததாக தெரிவித்த இந்திய முன்னாள் வீரர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பார்ட்னரின் தவறால் ரன் அவுட் ஆகியிருந்தாலும் விராட் கோலி அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற்று  வருகிறது. நேற்று டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா டக் அவுட் ஆக, மயங்க் அகர்வால் 17 ரன்களில் அவுட்டனார். இதன்பிறகு, புஜாரா, விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் களத்தில் நின்று ரன் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்நிலையில், 74 ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி போய் கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி, ரஹானேவின் தவறால் ரன் அவுட் ஆனார்.

லயன் வீசிய 77-வது ஓவரின் கடைசி பந்தில்,  ஸ்ட்ரைக்கில் இருந்த ரஹானே சிங்கிள் ரன் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கியதால், நான் ஸ்டரைக்கரில் இருந்த கோலி ரன் அவுட் ஆனார். இதையடுத்து பல முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை ரஹானேவை விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘அந்த பந்தில் ரன் எடுத்து இருக்கவே முடியாது. ஃபீல்டர் மிக அருகில் இருந்தார். இருப்பினும் பார்ட்னர் ரஹானேவின் அழைப்பை தட்டாமல் ரன் எடுக்க முன்வந்தார். கடைசியில் ரஹானே வேண்டாம் என்றதும் திரும்பி செல்வதற்குள் ரன் அவுட்டாகி விட்டார்.

தவறு பார்ட்னர் மீது இருந்தாலும் அவரிடம் கோபித்துக் கொள்ளாமல் சாந்தமாக விராட் கோலி திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த இன்னிங்சில் பல தடைகளை கடந்த கோலிக்கு கொஞ்சம் வலி இருக்கும். அது இயல்பு’ என்று கூறியுள்ளார். பொதுவாகவே விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவார் என்று விமர்சனங்கள் வந்தநிலையில்இ தற்போது அது மாறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்