"நம்பர் 18 நான் கேட்டு வாங்குனதில்ல, ஆனா".. ஜெர்சி நம்பர் பின்னாடி இப்டி ஒரு ரகசியமா?.. கலங்கிய விராட் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய  கிரிக்கெட் அணி சமீபத்தில்  ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட்  மற்றும் ஒரு நாள் தொடர்களில் மோதி இருந்தது. இதில் முதலாவதாக நடந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது இந்திய அணி.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நீங்க நல்லா இருக்கணும் அண்ணா".. பிரபல முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு.. மனசார வாழ்த்திய திருநங்கைகள்.. வீடியோ..!

இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி இருந்தது. இதில், இந்திய அணியை வீழ்த்தி, 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி பட்டையை கிளப்பி இருந்தது.

இரு தொடர்களுக்கும் பிறகு தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் பார்வையும் ஐபிஎல் தொடர் மீது  தான் உள்ளது. மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாகும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத் மைதானத்தில் மோதுகின்றன.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். முதல் ஐபிஎல் சீசன் முதல் தற்போது வரை ஒரே அணிக்காக ஆடும் வீரரும் விராட் கோலி மட்டும் தான். அதே போல, U 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த நாள் முதல் சர்வதேச அணியில் ஆடிய பிறகும், பின்னர் ஐபிஎல் தொடரிலும் என அனைத்திலும் விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18 ஆக தான் உள்ளது.

விராட் கோலி என்றாலே ரசிகர்கள் பலருக்கும் 18 என்ற எண்ணும் உடனடியாக நினைவுக்கு வரும். அப்படி இருக்கையில், இந்த ஜெர்சி எண்ணுக்கு பிறகுள்ள சில காரணங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் இது தொடர்பாக பேசி இருந்த விராட் கோலி, "நான் எப்போதுமே 18 ஆம் எண் ஜெர்சியை கேட்டு வாங்கியதே இல்லை. U 19 சமயத்தில் எனக்கு இந்த எண் கிடைத்தது. பின்னர் இந்திய அணிக்காக நான் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் ஆனேன். எதிர்பாராத விதமாக என் தந்தை இறந்த தேதியும் 18 தான். இதனால் வழக்கமான ஒரு எண் போல இல்லாமல் எனக்கு மிகவும் நெருக்கமான எண்ணாகவும் 18 மாறி விட்டது" என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்சி நம்பர் 18 -க்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் மிக உருக்கம் நிறைந்த ஒரு பந்தம் ரசிகர்கள் பலரை கலங்கவும் வைத்துள்ளது.

Also Read | T20 வரலாற்றுலேயே மிகப்பெரிய ரன் சேசிங்.. தென்னாப்பிரிக்க அணியின் இமாலய சாதனை..!

CRICKET, VIRAT KOHLI, VIRAT KOHLI JERSEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்