இனி அணியில் விராட் கோலியின் ரோல் என்ன..? இந்திய டி20 கேப்டன் ‘ரோஹித் ஷர்மா’ சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் விராட் கோலியின் பங்களிப்பு குறித்து ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறியது. அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவிந்திருந்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நாளை (17.11.2021) இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று சந்திக்கவுள்ள முதல் டி20 தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (16.11.2021) ரோஹித் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இனிமேல் அணியில் விராட் கோலியின் பங்கு என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, ‘அணியின் மிக முக்கியமான வீரர் விராட் கோலி. எந்தவொரு போட்டியில் அவர் விளையாடினாலும், அவருக்கான தடத்தை பதித்துவிடுவார். விராட் கோலி அணியில் இருப்பது கூடுதல் பலம் என்பதை உறுதியாக கூறுவேன்.

விராட் கோலி நிறைய அனுபவம் வாய்ந்த வீரர், அவரை போன்ற வீரர் அது அவர் ஒருவர் மட்டும்தான். ஒவ்வொருவருக்கும் அணியில் ஒரு வேலை உள்ளது. அது பேட்டிங் செய்கிறோமா அல்லது சேசிங் செய்கிறோமா என்பதை பொறுத்து மாறும்’ என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

VIRATKOHLI, ROHITSHARMA, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்