"எல்லா இடத்துலயும் அவரு இருக்காருங்க".. தோனி குறித்து கோலியின் வைரல் பதிவு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலி பேட்டிங் மீது அதிக விமர்சனம் இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | நூறு நாள் வேலை பாத்துக்கிட்டே குரூப் 2 தேர்வில் சாதிச்ச 55 வயது "பார்வை மாற்றுத்திறனாளி".. குவியும் பாராட்டுகள்.

ஆனால், உலக கோப்பை தொடரில் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடி இருந்தார். ஆறு போட்டிகள் ஆடி இருந்த விராட் கோலி, 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும், உலக கோப்பைத் தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலிலும் கோலி தான் முதலிடத்தில் இருந்தார்.

டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்திய அணி அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி 20 மற்றும் ஒரு நாள் தொடரில் ஆட உள்ளது. இதிலிருந்து, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பைத் தொடரில், தான் கிங் தான் என்பதை கோலி நிரூபித்துள்ளதால் அடுத்து வரும் தொடர்களில் அவரது பழைய ஃபார்மை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ஆன தோனி குறித்து கோலி பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரிடையே கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பான நட்புறவு இருந்து வருகிறது. தனது கிரிக்கெட் பயணத்தில்  தோனியின் பங்கு குறித்து சமீபத்தில் கூட சில உருக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார் கோலி. கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று ஒரு சில ஆண்டுகள் ஆனாலும் தோனி சொல்லிய விஷயங்கள் எந்த அளவுக்கு தனது விளையாட்டில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளது என்றதையும் நினைத்து கோலி மனம் நெகிழ்ந்து போயுள்ளார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது தோனி குறித்து ஒரு இன்ஸ்டா ஸ்டோரியை பகிர்ந்துள்ளார் கோலி. அதில் தண்ணீர் பாட்டில் ஒன்றில் விளம்பரத்திற்காக தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கோலி, "அவர் எங்கும் இருக்கிறார். தண்ணீர் பாட்டிலில் கூட" என குறிப்பிட்டு தோனியை டேக் செய்துள்ளார். தோனி குறித்த கோலியின் பதிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | "கார், டிவி எதுவும் இப்ப வாங்காதீங்க".. அமேசான் நிறுவனர் ஜெப் அடித்த எச்சரிக்கை மணி?!.. பரபரப்பு பின்னணி ..

CRICKET, VIRAT KOHLI, MS DHONI, VIRAT KOHLI INSTA STORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்