திடீரென ‘விலகிய’ விராட் கோலி.. கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடததற்கான காரணம் குறித்து கே.எல்.ராகுல் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இன்று (03.01.2022) ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இளம் வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஹனுமா விஹாரி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது விராட் கோலி விளையாடததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘விராட் கோலிக்கு திடீரென மேல் முதுகு பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் இப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. விரைவில் குணமாகி அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நம்புகிறேன்’ என கே.எல்.ராகுல் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஒவ்வொரு இந்திய வீரருக்கும் இந்திய அணியை தலைமையேற்று நடத்துவது கனவாக இருக்கும். இந்த தருணத்தில் கேப்டனாக பொறுப்பேற்ற நான் சவால்களை எதிர்நோக்கி காத்துள்ளேன்’ என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்