"அந்த ஒரு சிக்ஸ்".. அடிச்சு முடிச்சதும் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. "பாத்த எங்களால கூட நம்ப முடியல".. மிரள வைத்த ஷாட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

மொத்தமுள்ள 12 அணிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தீவிரமாக ஆடி வருகின்றனர்.

இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளை சூப்பர் 12 சுற்றில் ஆடி உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இன்று (27.10.2022) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி உள்ளது. மேலும், தங்களது பிரிவில் முதல் இடத்திலும் இந்திய அணி உள்ளது.

மீதமுள்ள போட்டிகளில் இதே போன்று அசத்தலாக ஆடினால் நிச்சயம் அரை இறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறி விடலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதனிடையே, டி 20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலி பேட்டிங் மீது சில விமர்சனங்கள் இருந்தது.

ஆனால், டி 20 உலக கோப்பை தொடரில் இதுவரை ஆடியுள்ள இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்து அசத்தி உள்ளார் விராட் கோலி. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் கடைசியில் 3 சிக்ஸர்களை விரட்டி இந்திய அணி வெற்றி பெறவும் கோலி உதவி இருந்தார். அதிலும் குறிப்பாக, ஹாரிஸ் ராஃப் ஓவரில் கோலி அடித்த சிக்ஸ், கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மிரள வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிலையில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸ் ஒன்றை அடித்த கோலி அதன் பின்னர் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. Frad Klaaseen வீசிய 17 ஆவது ஓவரில் டீப் எக்ஸ்டரா கவர் திசையில் மிகவும் பிளாட்டாக சிக்ஸ் ஒன்றை கோலி அடித்திருந்தார்.

மிகவும் கஷ்டமான ஒரு ஷாட்டாக இது இருந்ததால், இதனை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் டிவியில் பார்த்த ரசிகர்களும் சிறந்த சிக்ஸர் ஷாட் என கொண்டாடி இருந்தனர்.

அதே வேளையில், தன்னால் கூட தான் அடித்த சிக்ஸர் ஷாட்டை நம்ப முடியவில்லை என்பது போல ரியாக்ஷன் ஒன்றை கோலி கொடுத்திருந்தார்;. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

VIRATKOHLI, IND VS NED, T 20 WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்