ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்.. ஸ்லிப்பில் நின்றபடி Protein Bar சாப்பிட்ட கோலி.. வைரல் ஆகும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது.

                                           Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

அசத்திய இந்திய அணி..

முன்னதாக, இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தக்க வைத்திருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்த சூழலில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தடுமாற்றம் கண்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறவும் செய்திருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் கம்பேக்

இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருந்த மூன்றாவது போட்டியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு நேர்மாறான சம்பவம் நடந்திருந்தது. அதாவது இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் சேர்க்கவும் கடும் தடுமாற்றம் கண்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளிலேயே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதிப் போட்டியில் முன்னேற்றம் கண்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners

அசத்திய கவாஜா

அதே வேளையில், தற்போது ஆரம்பமாகியுள்ள நான்காவது போட்டியை இந்திய அணி வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய அவர்கள், ஆரம்பத்தில் இருந்து நிதானமாக அடி ரன் குவித்தனர்.

Images are subject to © copyright to their respective owners

அதிலும் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மிகச்சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்த சூழலில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்.

வைரலாகும் கோலியின் செயல்

கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி உள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெல்வது சவால் நிறைந்து இருக்கும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய வீரர் கோலி செய்த விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 22 ஓவர்கள் முடிவடைந்திருந்த சூழலில், 23 ஆவது ஓவர் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக மார்னஸ் பேட்டிங் செய்ய தயாராகி கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் ஸ்லிப்பில் நின்ற இந்திய வீரர் விராட் கோலி, Protein Bar உண்டபடி நின்றது தொடர்பான வீடியோ தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றும் வருகிறது.
 

 

VIRATKOHLI, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்