நான் என் வாழ்க்கையில 'இத' மட்டும் மறக்கவே மாட்டேன்...! 'எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான...' விராட் கோலி மனம்திறந்த பேட்டி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தனக்கும், கேன் வில்லியம்ஸனுக்கும் ஒரே மாதிரியான மனநிலையே இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 5-0 என முழுமையாக வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்த ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை.

இதையடுத்து, ஆட்டத்தின் நடுவே விராட் கோலியும், கேன் வில்லியம்ஸனும் பவுண்டரி எல்லை அருகே ஒன்றாக அமர்ந்து உரையாடினர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஆட்டம் நிறைவடைந்த பிறகு கேன் வில்லியம்ஸன் மற்றும் அவரது தலைமைப் பண்பு குறித்து பேசிய விராட் கோலி,

"கேன்னுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான மனநிலையும், தத்துவமும் உள்ளன. இருவரும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தபோதிலும், எங்களுக்கு ஒரே மாதிரியான சிந்தனை இருப்பதும், நாங்கள் ஒரே மொழியைப் பேசுவதும் அற்புதமாக உள்ளது. இன்று நான் அவரோடு ஆற்றிய உரையாடலை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். நியூஸிலாந்து கிரிக்கெட் சிறந்த கைகளில் இருப்பதாக உணர்கிறேன். இந்த அணியை வழிநடத்த இவர்தான் சரியான வீரர். இதற்கு இவர் மிகமிக சரியான நபர். இந்த அணி விளையாடுவதைப் பார்ப்பதையும், இந்த அணிக்கு எதிராக விளையாடுவதையும் அனைவரும் விரும்புவார்கள்" என்றார்.

இருவரும் 19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் காலத்தில் இருந்தே கிரிக்கெட் உலகில் உள்ளனர். கேன் வில்லியம்ஸன் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 19-வயதுக்குட்பட்டோருக்கான நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளை வழிநடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, KANEWILLIAMSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்