‘எனக்கு அப்புறம் கேப்டன் அவர்தான்’!.. டி20 கேப்டனாக கடைசி போட்டி.. டாஸ் ஜெயிச்சதும் கோலி கொடுத்த சர்ப்ரைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் குரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் குரூப் 2-ல் விளையாடிய இந்திய அணி, முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டது. இந்த நிலையில் இன்று (08.11.2021) இந்தியா தனது கடைசி போட்டியில் நம்பீயாவை எதிர்த்து விளையாடுகிறது.

துபாய் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியுடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகவுள்ளார். இந்திய டி20 அணிக்கு கேப்டனாக விராட் கோலி விளையாடும் கடைசி போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி, ‘இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். ஒரு கேப்டனாக என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக கொடுத்துள்ளேன். ஷார்ட்டெஸ்ட் பார்மெட்டில் (டி20, ஒருநாள்) சிறப்பாக விளையாடியதால்தான் லாங்கெஸ்ட் பார்மெட்டில் (டெஸ்ட்) விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதை நினைத்தால் பெருமையாக உள்ளது’ என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தலைமை பொறுப்பை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி ரோஹித் ஷர்மா (Rohit Sharma) எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். இந்திய அணி ஒரு சிறந்த நபரின் கையில் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது’ என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய டி20 அணிக்கு அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா என்பது உறுதியாகியுள்ளது.

VIRATKOHLI, ROHITSHARMA, INDVNAM, T20WORLDCUP, CAPTAIN, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்