VIDEO: என்னங்க நெனச்சிட்டு இருக்கீங்க...? 'நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்...' 'ஓரளவு தான் பொறுக்க முடியும்...' 'மேட்ச் நடுவுல கோவத்தோட உச்சிக்கு போன கோலி...' - என்ன நடந்துச்சு...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருட ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கும் 4-வது இடத்தில் இருக்கும் கேகேஆர் அணிக்கும் இடையேயான முதல் எலிமினேட்டர் போட்டி நேற்று (11-10-2021) நடைபெற்றது.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தில் தேவ்தட் படிக்கல் 21 ரன்களும், விராட் கோலி 39 ரன்களும் எடுத்து நல்ல ஒப்பனிங்கை அளித்தனர்.

விராட் கோலியுடன் சேர்த்து, அடுத்தடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் (9), மேக்ஸ்வெல் (15) மற்றும் டிவில்லியர்ஸ் (11) ஆகியோர் சுனில் நரைனின் சுழல் பந்தில் கரை ஏற முடியாமல் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்களும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி போயினர். கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 138 ரன்கள் மட்டும் எடுத்தது.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய டார்கெட்டை நோக்கி களமிறங்கியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வந்தது. ஆனால் ஆர்சிபி கடைசி ஓவர் வரை வெற்றிக்காக சண்டை செய்தது. ஆயினும் இறுதியில் கொல்கத்தா அணியே வென்றது.

இந்த போட்டியின் அம்பயரான விரேந்திர சர்மா பல முடிவுகளை தவறாக வழங்கினார். அம்பயர் கொடுத்த தவறான முடிவுகள் பெங்களூர் அணிக்கு பாதகமாக அமைந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான பெங்களூர் கேப்டன் விராட் கோலி, நேராக அம்பயரை நோக்கி சென்று அவருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

இதனால் போட்டியின் நடுவே பரபரப்பு ஏற்பட்டது. விராட் கோலியின் இந்த கோவம் நியாயம் தான் என்றாலும், இது விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் விராட் கோலி நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்