"மீண்டும் மீண்டுமா??.." பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிச்சுக்கிட்டே நின்ன கோலி.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 31 ஆவது போட்டி, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இதில், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி,நான்கில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மறுபக்கம், பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில், நான்காம் இடத்தில் உள்ளது.

தனியாளாக போராடிய டு பிளெஸ்ஸிஸ்

தற்போது நடைபெற்று வரும் போட்டியில், லக்னோ கேப்டன் கே எல் ராகுல் டாஸ் வென்று, பீல்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆர்சிபி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பெங்களூர் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மட்டும் தனியாளாக நிலைத்து நின்று ரன் சேர்த்தார். நூலிழையில் சதத்தினை தவற விட்ட டுபிளெஸ்ஸிஸ், 96 ரன்களில் அவுட்டானார்.

மீண்டும் ஏமாற்றிய கோலி

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கோலியின் ஃபார்ம், ரசிகர்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றி உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள கோலி, 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்காத கோலி, இரண்டு முறை மட்டும் 40 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, லக்னோ அணிக்கு எதிராக இன்றைய (19.04.2022) போட்டியில் கோலி அவுட்டான விதம், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.

சமீரா வீசிய முதல் ஓவரில், அனுஜ் ராவத் அவுட்டாக, களத்திற்கு வந்தார் கோலி. டு பிளெஸ்ஸிஸுடன் சேர்ந்து, சிறந்த பார்ட்னர்ஷிப்பை கோலி அமைப்பார் என ரசிகர்ளும் நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், கோலி சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்கானார்.

சமீரா வீசிய பவுன்சர் பந்தினை, கோலி சரியாக அடிக்காமல் போக, அது பாய்ண்ட் திசையில் நின்ற தீபக் ஹுடாவிடம் கேட்ச் ஆக மாறியது. இந்த விக்கெட்டை கொஞ்சம் கூட நம்ப முடியாமல் நின்ற கோலி, அந்த ஏமாற்றத்தில் சிரித்துக் கொண்டே நிற்கும் வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

VIRATKOHLI, FAF DU PLESSIS, IPL 2022, RCB, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்