Video: ரன் தேவைதான் அதுக்காக இப்டியா ‘ஓடுவீங்க’.. உங்க கடமை ‘உணர்ச்சிக்கு’ ஒரு எல்லையே இல்லையா கோலி.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 39-வது லீக் போட்டி நேற்று (22.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆனால் பெங்களூரு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை மட்டுமே கொல்கத்தா அணியால் எடுக்க முடிந்தது. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் 30 ரன்கள் எடுத்தார்.

இதில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தான் வீசிய 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் 2 மெய்டின் ஓவர்களை வீசி சாதனை படைத்தார். இந்தநிலையில் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 85 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 40 பந்துகளில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அப்போது ப்ரஷித் கிருஷ்ணா வீசிய ஓவரை எதிர்கொண்ட கோலி, பந்தை பின்னே தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடுனார். வெற்றிக்கு 1 ரன்தான் தேவை என்பதை மறந்த கோலி மீண்டும் 2-வது ரன் எடுக்க ஓடினார். இதனை உடனே உணர்ந்த கோலி சிரித்துக்கொண்டே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்