“உங்களுக்கு ஒரு அப்டேட் கொடுக்க போறேன்..” பாதியிலேயே ‘கட்’ ஆன வீடியோ.. கோலி என்ன சொல்ல வந்தார்? எகிறும் எதிர்பார்ப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணியின் கேப்டன் குறித்து விராட் கோலி ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் இப்போதே பயிற்சிகளை தொடங்கிவிட்டன. இந்த சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டன் யார் என்பதையே அறிவிக்காமல் உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு கேப்டானக விராட் கோலி செயல்பட்டார். ஆனால் அவர் தலைமையிலான ஆர்சிபி அணி ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. அதனால் கடந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். இதனால் புதிய கேப்டன் யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த மெகா ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர், தினேஷ் கார்த்திக் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ் ஆகிய இருவரை பெங்களூரு அணி எடுத்தது. இதில் யாரேனும் ஒருவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் மார்ச் 12-ம் தேதியன்று இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் விராட் கோலி பேசிய புதிய வீடியோ ஒன்றை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. அதில், ‘உங்களுக்காக சில அப்டேட்களை வழங்கவுள்ளேன். மிகச்சிறந்த ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். புத்துணர்ச்சியுடன் புதிய வீரர்களுடன் விளையாட ஆவலோடு இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால்...’, என கூறுவதற்குள் வரும் 12-ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியாகும் என வீடியோ நின்றுவிட்டது.

அதனால் புதிய கேப்டனுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விராட் கோலி மீண்டும் ஆர்சிபிக்கு கேப்டனாக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அதனால் ஆர்சிபி அணியின் கேப்டன் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்