கேப்டன் பதவியில இல்லைனாலும்.. கோலி இதை பண்ண மட்டும் எப்பவும் தவறமாட்டார்.. உருக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி இன்று (19.01.2022) போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மற்றும் டி காக் மற்றும் ஜன்னேமான் மாலன் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஜன்னேமான் மாலன் அவுட்டானார். இதனை அடுத்து 26 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் வீசிய ஓவரில் போல்டாகி டிக் காக் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஐடன் மார்க்ராமும் ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா (110 ரன்கள்) மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (129* ரன்கள்) ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது.
இந்த நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தியதும் வேகமாக ஓடிவந்த அஸ்வினை விராட் கோலி இறுக்கமாக கட்டியணைத்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் சக வீரர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்வதில் இருந்து விராட் கோலி எப்போது மாற்ற மாட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இப்போட்டியில் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் விளையாடியிருந்தார். அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வந்தார். இந்த சூழலில் 5 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் ஒருநாள் போட்டியில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
கிரிப்டோகரன்சிக்கு புதிய ரூல்ஸ்! சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட தகவல்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்
தொடர்புடைய செய்திகள்
- நீண்ட நாள் காத்திருப்பு.. "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது.." தயாராகும் கோலி?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- கேப்டன் பதவி.. விலகிய கோலி.. ரோஹித், ராகுல் எல்லாம் அதுக்கு தான் வெயிட்டிங் போல.. பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் வீரர்
- தோனிக்கு கோலி சொன்ன ‘அதே’ வார்த்தை.. இப்போ அதை விராட்டுக்கு சொன்ன சிராஜ்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!
- ‘கேப்டன்ஷி சர்ச்சை’.. இப்படி செஞ்சுதான் கோலியை இந்த முடிவை எடுக்க வச்சிருப்பாங்க.. பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாகிஸ்தான் வீரர்..!
- RCB அணிக்கு அடுத்த கேப்டன் இவரா..? லிஸ்ட்லயே இல்லாத பெயரா இருக்கே..! கசிந்த தகவல்..!
- ரோஹித் சரிபட்டு வரமாட்டாரு.. டெஸ்ட் கேப்டன் பதவியை அந்த பையனுக்கு கொடுக்கலாம்.. புது ட்விஸ்ட் வச்ச கவாஸ்கர்..!
- என்னய்யா புது ட்விஸ்ட்டா இருக்கு.. கேப்டன் பதவிக்கு விருப்பம் தெரிவித்த முன்னணி வீரர்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
- ‘கேப்டன்ஷி யாருக்கும் பிறப்புரிமை இல்ல’.. காட்டமாக கோலிக்கு அட்வைஸ் செய்த முன்னாள் வீரர்..!
- ரோஹித்தா?.. ராகுலா?.. கோலியின் இடம் யாருக்கு?.. இந்த 'லிஸ்ட்'ல சர்ப்ரைஸாக இருக்கும் இளம் வீரர்
- கேப்டன் பதவி விலகுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன் அவசர மீட்டிங்.. வீரர்களிடம் கோலி வச்ச ‘ஒரு’ முக்கிய கோரிக்கை..?