டைவ் அடிக்கும்போது கையில் அடி.. அப்ப கூட எதிரணிக்கு பயத்தை காட்டிய கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் கையில் காயம் ஏற்பட்டது

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (19.01.2022) போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 110 ரன்களும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 129 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தநிலையில் இப்போட்டியில் டெம்பா பவுமா அடித்த பந்தை விராட் கோலி டைவ் அடித்து தடுத்தார். அப்போது அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சில நொடிகள் அவர் பந்தை எடுக்காமல் இருந்தார். இதைப் பார்த்த டெம்பா பவுமா வேகமாக ரன் ஓட முயன்றார். இதைக் கவனித்த விராட் கோலி வேகமாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். இதனால் டெம்பா பவுமா ரன் ஓடாமல் திரும்ப வந்துவிட்டார். அடிபட்டபோது கூட எதிரணிக்கு கோலி பயத்தை காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் விராட் கோலி சந்திக்கும் முதல் ஒருநாள் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் பொறுப்பு காரணமாக அவர் பேட்டிங்கில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், பேட்டிங்கில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIRATKOHLI, INDVSSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்