ஏன் இந்த மேட்ச்லையும் அஸ்வினை எடுக்கல..? கோலி சொன்ன பதிலை கேட்டு ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்.. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து கேப்டன் கோலி சொன்ன பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூர் 57 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறாதது குறித்து விராட் கோலி கூறிய பதில் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஒரு போட்டியில் கூட அஸ்வின் இடம்பெறவில்லை. இதற்காக கேப்டன் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று டாஸ் போட்டு முடிந்ததும், அஸ்வின் ஏன் அணியில் இடம்பெறவில்லை? என விராட் கோலியிடம் வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கோலி, ‘இங்கிலாந்து அணி நான்கு இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது. அதனால் அவர்களுக்கு எதிராக ஜடேஜாவால் சிறப்பாக பந்துவீச முடியும். அதேபோல் பேட்டிங்கிலும் அவர் பக்கபலமாக இருப்பார்’ என பதிலளித்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் அஸ்வின்தான். அப்படி இருக்கையில் விராட் கோலி கூறிய இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்