எப்படி 'கெத்தா' இருந்த மனுஷன்...! 'நான் எங்கையும் போகமாட்டேன்...' 'மனசுல' இருந்தத கொட்டிய கோலி...! - வேதனையில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று குவாலிஃபயர் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிகொண்டன. இதுவே பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி ஆடும் கடைசி ஆட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த போட்டியிலும் பெங்களூரு அணி தோல்வியையே சந்தித்த காரணத்தால் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கிரிக்கெட் போட்டி முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, 'ஆர்.சி.பி அணியில் கேப்டனாக இதுவே என் கடைசி போட்டி.

என்னுடைய கேப்டன் தலைமையின் கீழ் இளைஞர்கள் நம்பிக்கையுடனும், முழு சுதந்திரத்துடனும் விளையாடுவதற்கு தேவையான சூழலை கொடுக்க முயற்சி செய்துள்ளேன்.

ஐபிஎல் போட்டி மட்டுமல்லாது இந்திய அணி அளவிலும் அதனைச் செய்துள்ளதாக நினைக்கிறேன். இதற்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், ஐபிஎல் தொடரில் இனி ஒரு வீரனாக இருப்பேன். ஆர்.சி.பி அணி என்னை முழுமையாக நம்பியது, மற்ற எல்லாவற்றையும் விட விசுவாசமாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே வரும் காலங்களில் ஆர்.சி.பி. தவிர வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன்' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்