கை நழுவி போன உலக கோப்பை வாய்ப்பு.. வெளியேற பிறகு உருக்கத்துடன் விராட் பகிர்ந்த ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலக கோப்பைத் தொடரின் அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

கை நழுவி போன உலக கோப்பை வாய்ப்பு.. வெளியேற பிறகு உருக்கத்துடன் விராட் பகிர்ந்த ட்வீட்!!
Advertising
>
Advertising

Also Read | "இனி எந்த இந்திய கேப்டனும் பண்ண முடியாது".. தோல்விக்கு பின் கம்பீர் சொன்ன 'அதிரடி' கருத்து!!

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் சூப்பர் 12 சுற்றில் பலம் வாய்ந்த அணியாகவும் இந்தியா திகழ்ந்திருந்தது.

இதனையடுத்து, அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகி இருந்தது. அதே போல, நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்ததால் 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டி போல இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என்றும் ரசிகர்கள் உற்சாகமாக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 168 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டி இருந்தது. முழுக்க முழுக்க இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி இருந்ததால் இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.

பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கூட இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தோல்விக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்த கருத்து, ரசிகர்கள் பலரையும் மனம் உருக வைத்து வருகிறது.

நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தார் விராட் கோலி. ஆறு போட்டிகளில்  மொத்தம் 4 அரை சதங்கள் அடித்திருந்த விராட் கோலி,அதிக ரன் குவிப்பிலும் முதலிடத்திலும் உள்ளார். உலக கோப்பைக்கு முன்பு தன் மீதிருந்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், அரையிறுதி சுற்றில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் போட்டி முடிந்ததும் கண் கலங்கி போயிருந்தார் விராட் கோலி.

இதனையடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார். இந்திய வீரர்கள் தேசிய கீதம் பாடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த விராட் கோலி, "எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியாவை விட்டு செல்கிறோம். எங்கள் மனதில் கூட வேதனை நிறைந்துள்ளது. ஆனால், ஒரு அணியாக நல்ல மறக்க முடியாத தருணங்களை எடுத்து சென்று இங்கிருந்து இன்னும் அதிகமாக மேம்படுத்த முயற்சிப்போம்.

மைதானத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்திய அணியின் ஜெர்சி அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

கோலியின் பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் அவரே தேற்றும் வகையில் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். நிச்சயம் அடுத்து வரும் ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | தோல்வி அடைந்த இந்திய அணி... Retirement குறித்து சுனில் கவாஸ்கர் சொன்ன பரபரப்பு கருத்து!!

CRICKET, VIRAT KOHLI, VIRAT KOHLI EMOTIONAL POST, T20 WORLD CUP SEMI FINALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்