VIDEO: ‘கோலிய இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு’.. அன்னைக்கு மேட்ச்ல இப்படியெல்லாம் பண்ணாரா..! திடீரென ‘வைரலாகும்’ வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் 210 ரன்களை குவித்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 74 ரன்களும், கே.எல்.ராகுல் 69 ரன்களும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 35 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை குல்பாடின் மற்றும் கரீம் ஜனத் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வேகமாக பவுண்டரி லைனை நோக்கி நடந்து வந்தார். அப்போது கேலரில் ஒலிபரப்பப்பட்ட ஹிந்தி பாடல் ஒன்றுக்கு திடீரென விராட் கோலி நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

VIRATKOHLI, T20WORLDCUP, INDVAFG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்