VIDEO: தலைவன் என்னைக்குமே ‘வேற மாதிரி’ தான்.. ‘எல்லாரும் அவரைப் பார்த்து கத்துக்கோங்க’!.. செம ‘ஜாலி’ மூடில் கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மைதானத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில், இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் இருந்து போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தபோது, கெயில் ஜேமிசன் ஓவரில் ரோஹித் ஷர்மா (34 ரன்கள்) அவுட்டாகினார். இவரைத் தொடர்ந்து நீல் வாக்னர் ஓவரில் சுப்மன் கில்லும் (28 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 8 ரன்னில் எல்பிடபுள்யூ ஆகி அதிர்ச்சியளித்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கோலி 44 ரன்களும், ரஹானே 29 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
ஆனால் மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கெயில் ஜேமிசன் ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி கோலி அவுட்டாகினார். இதனை அடுத்து 49 ரன்கள் எடுத்திருந்தபோது ரஹானேவும் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, 217 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து நியூஸுலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது. அதில் டாம் லாதம் 30 ரன்களும், டெவன் கான்வே 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது நியூஸுலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் பஞ்சாபி பாடல் ஒன்றிற்கு விராட் கோலி நடனம் ஆடினார். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கோலியின் இந்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு வீரரும் அவரிடமிருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த பார்டர தாண்டியாச்சு!.. இனி மொத்த மேட்ச்சையும் கோலி டேக் ஓவர் பண்ணிடுவாரு'!.. நியூசிலாந்துக்கு பறந்தது வார்னிங்!
- VIDEO: ‘ஹெல்மெட்டை பதம் பார்த்த பவுன்சர்’!.. ஒரு நொடி நிலைகுலைந்து போன ‘இந்திய’ பேட்ஸ்மேன்.. ஆரம்பமே ‘அதிர்ச்சி’ கொடுத்த நியூஸிலாந்து வீரர்..!
- பிட்ச் மாறப்போகுது, இப்போ போய் இப்படி ‘டீம்’ எடுத்து வச்சிருக்கீங்க.. நியூஸிலாந்து ப்ளேயிங் 11-ஐ கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!
- ‘ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சோதனை.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு..!
- ‘அதை வச்சு அவரை குறைச்சு மதிப்பிடாதீங்க’!.. பேட் கம்மின்ஸே புகழ்ந்து பேசிருக்காரு.. இந்திய வீரருக்கு ஆதரவாக ‘குரல்’ கொடுத்த தினேஷ் கார்த்திக்..!
- ‘வெற்றியுடன் விடை பெறணும்னு ஆசை’!.. WTC Final தான் என்னோட ‘கடைசி’ போட்டி.. ஓய்வு பெறப்போகும் நட்சத்திர வீரர்..!
- ‘விளையாட்டு காட்டும் வெதர்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சிக்கல்.. சவுத்தாம்ப்டன் நிலவரம் என்ன..?
- ‘14 வருசத்துல இதுதான் முதல்முறை’!.. WTC final-ல் ‘அவர்’ இல்லாமல் விளையாடப் போகும் கேப்டன் கோலி..!
- பவுலிங் படையில் ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்திய அணியின் ப்ளேயிங் 11 அறிவிப்பு!
- ‘WTC final-க்கு வந்த புதிய பிரச்சனை’!.. போட்டி ஆரம்பிக்கும் முதல் நாளே இந்த சோதனையா..!