அஷ்வினின் மன்கட் Try.. பேட்ஸ்மேனுக்கு அல்லு விட்ருச்சு.. அந்த பக்கம் கோலி செஞ்சதுதான்😂..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது போட்டியில் அஸ்வின் ஸ்மித்தை மன்கட் செய்ய முயற்சித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | துருக்கி நிலநடுக்கம்: காப்பாற்றியவரை விட்டு இறங்க மறுத்த பூனை.. நெகிழ வைக்கும் வீடியோ..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி அசத்தல் வெற்றி பெற்று, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையையும் தக்க வைத்து கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி. தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பது போல தெரிந்த சூழலில், இரண்டாவது இன்னிங்சில் போட்டியே மாறி போனது. 1 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலிய அணி, ஜடேஜா சூழலில் சிக்கித் தவித்தது.

Images are subject to © copyright to their respective owners.

கடைசி 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி, 113 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது. இந்த வெற்றியின் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியில் லபுசேன் 15 ஓவரில் அஸ்வினை எதிர்கொண்டார். நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் ஸ்டீவ் ஸ்மித் நின்றுகொண்டிருந்தார். அப்போது. ஸ்மித் கிரீஸை விட்டு வெளியே நின்றதை கவனித்த அஸ்வின் பந்து வீசும்போது மன்கட் செய்வதை போல நடந்துகொள்ள, அப்போது ஸ்மித் பத்திரமாக கிரீசுக்குள் நிற்பதை பார்த்து சிரித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே ஸ்லிப் பொசிஷனில் நின்று கொண்டிருந்த விராட் கோலி இதனை கண்டு கைகளை தட்டியபடி குலுங்கி சிரித்தார். தொடர்ந்து பேட்ஸ்மேன்களும் புன்னகைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | "பாகிஸ்தான் திவாகிவிட்டது".. குண்டை தூக்கிப்போட்ட பாதுகாப்பு அமைச்சர்.. அதிர்ச்சியில் மக்கள்..!

CRICKET, VIRAT KOHLI, ASHWIN, MANKAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்