'"One Day' மேட்ச்'ல இவங்க தான் ஓப்பனிங்..." 'ரசிகர்கள்' மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு.. 'கோலி' சொன்ன அசத்தல் 'பதில்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் மற்றும் டி 20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டையுமே இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகளும் புனே மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி 20 தொடரில், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் அதிக முறை, வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கியது.

இதில், ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்ததால், ஷிகர் தவானுக்கு ஒரு போட்டியில் மட்டுமே இடம் கிடைத்தது. அதே போல, மற்றொரு தொடக்க வீரர் கே எல் ராகுல் நான்கு போட்டிகளில் களமிறங்கியும், அதில் இரண்டு முறை ரன் எடுக்காமலும், இன்னொரு போட்டியில் 1 ரன்னுமே எடுத்தார்.

இதனால், கடைசி டி 20 போட்டியில் அவருக்கு பதிலாக, இந்திய கேப்டன் கோலி - ரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக ஆடியிருந்தது, அனைவரின் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், ஒரு நாள் போட்டியில் எந்தெந்த வீரர்கள் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இதனிடையே, ஒரு நாள் போட்டியில் யார் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பது பற்றி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 'நிச்சயமாக ரோஹித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ஒரு நாள் போட்டி என்று வரும் போது நிச்சயம் அவர்கள் தான் சிறந்த தொடக்க வீரர்கள்.


கடந்த சில ஆண்டுகளாகவே, அவர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்காக அளித்துள்ளனர்' என கோலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டி 20 போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, சிறப்பாக அடியிருந்த நிலையில், ஐபிஎல் போட்டியிலும் பெங்களூர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்குவேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்