அட நம்புங்க.. உண்மையாவே போன மேட்ச்ல விளையாடாததுக்கு ‘காரணம்’ இதுதான்.. கேப்டன் கோலி ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோல் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா 1 வெற்றிகளுடன் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளன. அதனால் நாளை (11.01.2022) நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (10.01.2022) செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து பதிலளித்துள்ளார். அதில், ‘நான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். முகமது சிராஜ் குணமடைந்து வருகிறார். வேகப்பந்து வீச்சாளர்களை பொருத்தவரை 110% ஃபிட்டாக இருந்தால் மட்டுமே விளையாட முடியும். அதனால் அவர் கடைசி போட்டியில் விளையாட மாட்டார்.

உண்மையாகவே எனக்கு முதுகு தசை பிடிப்பு இருந்தது. அதனால்தான் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை. நான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவேன் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் போட்டிக்கு முன்பாக எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதாவது நீங்கள் ஒரு மனிதர், உங்களுக்கும் உடல் தேய்மானம் அடையும் என்ற யதார்த்தத்தை இது காட்டுகிறது. இது உங்களுக்கு புரியவில்லை என்றால் வெறுப்பு அடைவீர்க்ள். என்னால் விளையாட முடியாது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஆனால் இது எல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி.

முகமது ராஜுக்கு பதில் யார் விளையாட உள்ளனர் என்பது குறித்து பயிற்சியாளர் மற்றும் துணைக் கேப்டன் ஆகியோருடன் இன்னும் நான் விவாதிக்கவில்லை. அனைவரும் நன்றாக விளையாடி வருவதால் யாரை அணியில் எடுப்பது என்பதை முடிவு செய்ய கடினமாக உள்ளது’ என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அப்போட்டியில் அவர் விளையாடவில்லை. அந்த போட்டியில் விளையாடி இருந்தால், நாளை நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக இருந்திருக்கும். ஆனால் இந்தியாவில் தனது 100-வது போட்டியை விளையாட வேண்டும் என்றே விராட் கோலி 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என பலரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்