"இது ரவுடிதனத்தோட 'உச்சம்'... இனிமே இப்டி நடக்க விடக் கூடாது..." கொதித்து எழுந்த 'கோலி'... 'சர்ச்சை'யை கிளம்பியுள்ள 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 309 ரன்கள் தேவை. இதனிடையே, மூன்றாவது மற்றும் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீசிய போது பவுண்டரி லைனுக்கு அருகே ஃபீல்டிங் நின்ற சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரை மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் இனவெறி ரீதியில் சில வார்த்தைகளால் சீண்டியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே போட்டி நடுவர்களிடம் புகாரளித்த நிலையில், சில நிமிடங்கள் போட்டி நடைபெற தாமதமானது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பார்வையாளர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்திய அணி வீரர்களுக்கு எதிராக நடந்த இந்த இனவெறி தாக்குதல் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், பல கிரிக்கெட் வீரர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'இனவெறி தாக்குதல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பவுண்டரி லைனுக்கு அருகே இது போன்ற பல விதமான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது ரவுடித்தனத்தின் உச்சம். களத்தில் இது போல நடப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இது போன்ற  சம்பவங்களை சரியாக கவனித்து கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என அவர் தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார். 



 

பல இந்திய வீரர்கள் வெளிநாட்டு மைதானத்தில் வைத்து தங்களுக்கு நடந்துள்ள இனவெறி தாக்குதல் குறித்து தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்