‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டன்ஷிப்பில் தோனியின் டெஸ்ட் சாதனையை சமன் செய்ய, கேப்டன் விராட் கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பல ஜாம்பாவன்களின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை தன்வசப்படுத்தி வருகிறார் விராட் கோலி. தற்போது கேப்டன்ஷிப்பில் தோனியின் டெஸ்ட் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார். விராட் கோலி தலைமையில் இதுவரை 46 போட்டிகளில் 26-ல் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. தோனியின் தலைமையில் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி, தோனியின் சாதனையை சமன் செய்வார். ஒருவேளை 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப்பில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்துவார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்தது. ஆனால் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..?
- ‘கனவிலும் நினைத்துப் பார்க்காத’... ‘டீன் ஏஜில் துவங்கிய’... விராட் கோலியின் உருக்கமான பதிவு!
- ‘இந்திய அணிக்கு அச்சுறுத்தல்?’... ‘என்ன நடக்கிறது வெஸ்ட் இண்டீசில்’!
- ‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..! வைரலாகும் வீடியோ..!
- ‘இப்டி நடக்கும்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க’.. ‘ஒரு இன்ச் தான் கேப்’.. வைரலாகும் வீடியோ..!
- 'CSK' கேப்டன் ஆனதுக்கு அப்புறம் 'தல' ஆனாரா தோனி? 'அப்டின்னா’ அதுக்குக் காரணம் இவர்தான்!
- ‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..!
- ‘ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம்’.. ‘ரிசர்வ் வங்கி’ வெளியிட்டுள்ள ‘முக்கிய அறிவிப்பு..’
- ‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
- ‘என்ன மன்னிச்சிருங்க விராட்’.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..! காரணம் என்ன..?