"இந்திய அணியில் என்னுடைய இடம்.." ஹர்திக் பாண்டியா சொன்ன சீக்ரெட்.. "இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.." பொங்கி எழுந்த பிரபலங்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில், ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ள கருத்திற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களில் இடம் பெறாமல் இருந்து வருகிறார்.

முன்னதாக, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து பல மாதங்கள் ஓய்வுக்கு பிறகு, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருந்தார்.

இதன் காரணமாக, ஆல் ரவுண்டரான அவரால், களமிறங்கிய போட்டிகளில் பந்து வீச முடியவில்லை. ஆல் ரவுண்டர் வீரர் ஒருவர், பந்து வீசாமல் பேட்டிங்கிற்காக அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருவதை, பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

டி 20 உலக கோப்பை

கடந்த ஆண்டு, நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடரில், இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, இரண்டு போட்டிகளில் மட்டுமே பந்து வீசிய நிலையில், அதிலும் கூட அதிகபட்சமாக 2 ஓவர்களை மட்டும் தான் வீசியிருந்தார்.

பந்து வீச முடியவில்லை

இதனால், மீண்டும் ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் அதிகரித்தது. அவர் பந்து வீச்சுக்கு தயார்படுத்திக் கொண்டு களமிறங்கியிருக்க வேண்டும் என்றும், ஆல் ரவுண்டர் என்ற பெயரில் பேட்டிங்கிற்காக மட்டும் களமிறக்க வேண்டாம் என்றும் பலர் விமர்சனம் செய்திருந்தனர். தொடர்ந்து, தான் டி 20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்ததை பற்றி சமீபத்தில் பேசிய ஹர்திக் பாண்டியா, தான் ஒரு பேட்ஸ்மேனாக தான் அணியில் இடம் பிடித்திருந்தேன் என்றும், பந்து வீச முயற்சித்தும், என்னால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கடும் விமர்சனம்

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இந்த கருத்தினை விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ் குமார் ஷர்மா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 'டி 20 உலக கோப்பை போட்டியில், ஹர்திக் பாண்டியாவிற்காக, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் சாதகமாக இருந்தனர்.  ஆனால், ஹர்திக் பாண்டியா வெளியே வந்து பேசியிருப்பதை நன்கு முதிர்ந்த ஒருவர் பேசும் வாக்காக நான் கருதவில்லை.

எந்த அர்த்தமும் இல்லை

உடற்தகுதி தொடர்பாக உங்களுக்கு பிரச்சனைகள் இருந்த போதும், உலக கோப்பை அணியில் இடம் கிடைத்ததற்கு நீங்கள் நன்றி தான் சொல்ல வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதே போல, இந்திய அணியின் முன்னாள் வீரரான நிகில் சோப்ராவும், ஹர்திக் பாண்டியா கருத்தினை விமர்சனம் செய்துள்ளார். 'ஹர்திக் பாண்டியாவை பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்க முடிவு செய்திருந்தால், அதனை பிசிசிஐ, உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த போதே குறிப்பிட்டிருக்க வேண்டும். மாறாக, ஹர்திக் பாண்டியா அதனைப் பற்றி கருத்து வெளியிடுவதால் எந்த அர்த்தமுமில்லை.

மாட்டிய ஹர்திக் பாண்டியா

உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படாமல் போனதற்கு, தன்னை தான் விமர்சனம் செய்வார்கள் என ஹர்திக் பாண்டியா கருதியிருக்கலாம். பொதுவாக ஒரு அணி சிறப்பாக செயல்படாமல் போனால், ஒரு வீரரின் ஆட்டத்தை தான், பலரும் குறை கூறுவார்கள். அது இந்த முறை, ஹர்திக் பாண்டியாவிற்கு நிகழ்ந்துள்ளது' என நிகில் சோப்ரா தெரிவித்துள்ளார்.

HARDIKPANDYA, RAJKUMAR SHARMA, BCCI, NIKHIL CHOPRA, ஹர்திக் பாண்டியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்