"அவரு அப்படி நெனச்சதே இல்ல.." புதிதாக எழுந்த 'குரல்'.. 'கோலி' விவகாரத்தில் 'முடிவு' கிடைக்குமா??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது முதலே, கோலி மற்றும் பிசிசிஐ குறித்து பல்வேறு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தான் தலைமை தாங்குவது பற்றி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமித்தது.



இது பற்றி விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, டி 20 போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என கோலியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதனை கோலி கேட்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், கங்குலியின் கருத்தை மறுத்த கோலி, ஒரு நாள் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பான தகவல் கூட தனக்குக் கடைசி நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டார். இரண்டு பேரும், வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்ததால் கிரிக்கெட் வட்டாரத்தில், பெரும் குழப்பம் உருவாகியது. அது மட்டுமில்லாமல், கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய சம்பவமும், கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கோலி மற்றும் பிசிசிஐ பற்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'கோலி குறித்து செய்திகள் தெரிய வந்ததும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விராட் கோலி சம்மந்தப்பட்டது என்பதால், இந்த சம்பவம் குறித்து நான் அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன்.

ஆனால், இரு தரப்பினரும் வலுவான வார்த்தைகளை பயன்படுத்தாமல், எந்த ஒரு விஷயத்தையும் மூடி மறைக்காமல், வெளிப்படையாக விவாதித்து தகுந்த முடிவினை எடுக்க வேண்டும். இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில், தேவையில்லாத சர்ச்சைகளை நாம் உருவாக்க வேண்டாம் என கருதுகிறேன். விராட் கோலி எதற்கும் பேராசை படமாட்டார். அதிக தன்னம்பிக்கையுள்ள அவர், எப்போதும் நூறு சதவீத பங்கைக் கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதனைச் சிறப்பாக கையாண்டு, பிசிசிஐ யாருக்கும் பாதகமில்லாத ஒரு முடிவினை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் முடிவை சரியாக ஆலோசித்து எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

VIRAT KOHLI, SOURAV GANGULY, BCCI, RAJKUMAR SHARMA, கோலி, கங்குலி, பிசிசிஐ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்