இந்த ஒரு விஷயத்தை தோனி கிட்ட இருந்து கத்துக்கோங்க ரோகித்.. காட்டமாக அட்வைஸ் செய்த கோலியின் சிறுவயது கோச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியிடம் இருந்து இந்த பண்பை கற்றுக்கொள்ள வேண்டும் என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவின் முழுநேர கேப்டனாக சமீபத்தில் ரோகித் சர்மா பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து தொடரை இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 3-0 என்ற கணக்கில் அடுத்தடுத்த தொடர்களை வெற்றி பெற்று இந்தியா அசத்தியது.

ஆனாலும் ஒரு சில பதற்றமான சூழ்நிலைகளில் கோபமடையும், வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களை வருத்தமடையச் செய்கிறது. குறிப்பாக சமீபத்தில் கொல்கத்தா மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் ஒரு போட்டியில் புவனேஷ்வர் குமார் ஒரு கேட்ச்சை தவற விட்டார். இதானல் கோபமடைந்த ரோகித் சர்மா பந்தை எட்டி உதைத்தார். அதேபோல் அந்த டி20 தொடரின் ஒரு போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இளம் வீரர் இஷான் கிஷானிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து ரோகித் சர்மா பேசியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த நிலையில் ஒரு கேப்டனாக அணியில் உள்ள வீரர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விராட் கோலியின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ரோகித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், ‘களத்தில் ரோகித் சர்மா கூல் கேப்டனாக காட்சி அளிக்கிறார். ஆனால் பதற்றமான சூழ்நிலைகளில் அவ்வப்போது கோபப்பட்டு விடுகிறார்.

அணியில் விளையாடும் வீரர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அணியில் உள்ள ஒருவர் தவறு செய்தால் அதை பொறுமையான வழியில் அவர்களுக்கு உணர வைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்று சேர்ந்து செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைக் கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது பார்த்துள்ளோம். அவர் கேப்டனாக இருந்தபோது கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரி எல்லைக்கு பீல்டிங் செய்ய சென்று விடுவார். அந்த சமயத்தில் தோனிதான் விக்கெட் கீப்பராக நடுவில் இருந்து கேப்டன்ஷிப் செய்வார்’ என கூறினார்.

கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவருக்கு பல ஆலோசனைகளை முன்னாள் கேப்டன் தோனி வழங்கினார். தற்போது அதே வழியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பில் இல்லாத நிலையிலும் விராட்கோலி பல ஆலோசனைகளை வழங்குவது பாராட்டுக்குரியது என ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அதனால் வீரர்களை எப்படி கையாள்வது என்று தோனியிடம் ரோகித் சர்மா கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்